புரோமோசில் முப்புளோரைடு

வேதிச் சேர்மம்

புரோமோசில் முப்புளோரைடு (Bromosyl trifluoride) என்பது BrOF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

புரோமோசில் முப்புளோரைடு
Bromosyl trifluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமின் ஆக்சைடு முப்புளோரைடு, புரோமோசில் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
61519-37-7 Y
InChI
  • InChI=1S/BrF3O/c2-1(3,4)5
    Key: VPGKBABVAVJLLQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21732508
  • O=Br(F)(F)F
பண்புகள்
BrF3O
வாய்ப்பாட்டு எடை 152.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நீரற்ற ஐதரசன் புளோரைடுடன் பொட்டாசியம் டெட்ராபுளோரோ ஆக்சோபுரோமேட்டு (K[BrOF4) சேர்மத்தை சேர்த்து –78 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து புரோமோசில் முப்புளோரைடை தயாரிக்கலாம்.[1]

HF + K[BrOF4] -> BrOF3 + K[HF2]
  • இலித்தியம் நைட்ரேட்டுடன் புரோமின் ஐம்புளோரைடை சேர்த்து வினையில் ஈடுபடுத்தினாலும் புரோமோசில் முப்புளோரைடு உருவாகும்.[2]

இயற்பியல் பண்புகள்

தொகு

புரோமோசில் முப்புளோரைடு அறை வெப்பநிலையில் நிறமற்ற திரவமாக காணப்படுகிறது. இது தண்ணீருடன் வினைபுரிகிறது.[3]

வேதிப் பண்புகள்

தொகு

நிலைப்புத்தன்மை அற்ற புரோமோசில் முப்புளோரைடு அறை வெப்ப நிலையில் சிதைவடைகிறது:

2BrOF3 → 2BrF3 + O2

மேற்கோள்கள்

தொகு
  1. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  2. Ellern, Arkady; Boatz, Jerry A.; Christe, Karl O.; Drews, Thomas; Seppelt, Konrad (September 2002). "The Crystal Structures of ClF3O, BrF3O, and [NO]+[BrF4O]−" (in de). Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 628 (9–10): 1991–1999. doi:10.1002/1521-3749(200209)628:9/10<1991::AID-ZAAC1991>3.0.CO;2-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  3. Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.