புரோமோசைக்ளோயெக்சேன்
புரோமோசைக்ளோயெக்சேன் (Bromocyclohexane) என்பது C6H11Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோயெக்சைல் புரோமைடு என்றும் சி.எக்சு.பி என்ற சுருக்கப்பெயராலும் இதை அழைப்பதுண்டு.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமோசைக்ளோயெக்சேன்
| |
வேறு பெயர்கள்
சைக்ளோயெக்சைல் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
108-85-0 | |
ChemSpider | 7672 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7960 |
| |
பண்புகள் | |
C6H11Br | |
வாய்ப்பாட்டு எடை | 163.06 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.324 கி/செ.மீ3 |
உருகுநிலை | −57 °C (−71 °F; 216 K) |
கொதிநிலை | 166 முதல் 167 °C (331 முதல் 333 °F; 439 முதல் 440 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 62.8 °C (145.0 °F; 335.9 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கூழ்மங்களின் பொதுக்குவிய நுண்ணோக்கியியல் பயன்பாடு போல பாலி(மெத்தில் மெத்தக்ரைலேட்டு) சேர்மத்தின் ஒளிவிலகல் எண் பொருத்த செயல்பாடுகளுக்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. சிசு-டெக்காலின் மற்றும் புரோமோசைக்ளோயெக்சேன் கலவை தன்னிச்சையாக பாலி(மெத்தில் மெத்தக்ரைலேட்டு) சேர்மத்தின் ஒளிவிலகல் எண் மற்றும் அடர்த்தியுடன் பொருந்த முடிகிறது [1]. ε = 7.9 [2]) என்ற நடுநிலையான மின்காப்பு மாறிலியை இச்சேர்மம் பெற்றிருப்பதால் பாலி(மெத்தில் மெத்தக்ரைலேட்டு) சேர்மம் மின்சுமையைப் பெறுகிறது. டெட்ராபியூட்டைல் அமோனியம் புரோமைடு போன்ற உப்பைச் சேர்த்து இச்சுமையை தடுத்து புள்ளியியல் எந்திரவியல் கோட்பாட்டு பயன்பாடுகளில் இதை ஒரு மாதிரி கோளமாக பயன்படுத்தவியலும் [3]. பாலி(மெத்தில் மெத்தக்ரைலேட்டு) சேர்மத்தை புரோமோசைக்ளோயெக்சேன் நன்றாக கரைக்கும் என்பது இச்செயல்முறையில் ஒரு குறைபாடாகும். இதனால் நாளடைவில் உண்டாகும் வீக்கம் காரணமாக துகள்களின் ஆரம் மற்றும் திண்மங்களின் கன அளவுகளை தீர்மானிப்பதில் துல்லியக் குறைவு ஏற்படுகிறது [4].
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலையில் அல்லது மின்காந்த கதிர்வீச்சு முன்னிலையில் சைக்ளோயெக்சேன் வளையத்துடன் புரோமினை தனி உறுப்பு பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதனால் புரோமோசைக்ளோயெக்சேனை தயாரிக்க முடியும். ஆனால் இவ்வினையில் பாலி ஆலசனேற்ற விளைபொருள்களின் கலவை உருவாகலாம். ஐதரசன் புரோமைடை சைக்ளோயெக்சேனுடன் சேர்த்து தயாரிப்பது மற்றொரு தயாரிப்புப் பாதையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wiederseiner, S., Andreini, N., Epely-Chauvin, G. & Ancey, C. Refractive-index and density matching in concentrated particle suspensions: a review. Experiments in Fluids 50, 1183–1206 (2010).doi:10.1007/s00348-010-0996-8[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-01. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
- ↑ Royall, C. P., Poon, W. C. K. & Weeks, E. R. In search of colloidal hard spheres. Soft Matter (2012). doi:10.1039/c2sm26245b
- ↑ Poon, W. C. K., Weeks, E. R. & Royall, C. P. On measuring colloidal volume fractions. Soft Matter 8, 21 (2012). doi:10.1039/c1sm06083j