புர்பியா (வீரர்கள்)
புர்பியா (Purbiya) (அல்லது புராபியா ) என்பது இடைக்கால இந்தியாவில் பிராமண மற்றும் இராஜபுத்திரர்களின் கூலிப்படையினர் அல்லது வீரர்கள் ஆவர். இன்றைய மேற்கு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்துடன் தொடர்புடைய கிழக்கு கங்கை சமவெளி பகுதிகளைச் சேர்ந்த வீரர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் ஆகும். [1] [2] மேற்கு இந்தியாவில் உள்ள மார்வார் பிரதேசம் இராணுவம் மற்றும் குஜராத் சுல்தானகம் மற்றும் மால்வா சுல்தானகம் உட்பட பல்வேறு சமஸ்தானங்களின் இராணுவங்களில் புர்பியர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர்.[3] [4]
ஆட்சேர்ப்பு
தொகுநவீனகால மேற்கு பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் போஜ்பூர் போன்ற பகுதிகளில் புர்பியாவிற்கான ஆட்சேர்ப்பு அதிக அளவில் நடந்தது.[5] இராஜ்புத்திரர்களின் உஜ்ஜெனியா குலத்தினர் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய பிராந்திய பிரபுக்களாக இருந்தனர். மேலும் அவர்கள் பொதுவாக போஜ்பூரைச் சேர்ந்த இளம் விவசாயிகளாக இருந்த புர்பிய வீரர்களின் சிறப்பு ஆட்சேர்ப்பு முகவர்களாகவும் மற்றும் தளபதிகளின் பாத்திரத்தை வகித்தனர்.[5] இவர்கள் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பிரபுக்கள் மற்றும் மன்னர்களிடையே பெரும் நற்பெயரைப் பெற்றனர். மேலும் உஜ்ஜைனியாக்கள் மற்ற இராஜபுத்திர குலங்களிடையே தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனர்.[5]
இளம் விவசாயிகளாக இருந்து புர்பிய கூலிப்படையில் சேர்வதற்கு முன்பு பலர் நவீனகால பீகாரில் உள்ள பக்சருக்கு சென்று அங்கு அவர்கள் ‘புலித் தொட்டி’ எனப்படும் ஒரு குளத்தில் குளிப்பதன் மூலம் தங்களை ஒரு “அச்சமற்ற போர்வீரராக” கருதுவர்.[5]
வரலாறு
தொகுமுகலாயர்களும் புர்பியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கினர். முகலாய ஆதாரங்கள் பீகார் சுபாவின் ஒரு திவான் தனது அரசருக்கு சேவை செய்ய பக்சரில் படைவீரர்களை சேகரிக்க முயன்றதை முகலாய ஆதாரங்கள் விவரிக்கின்றன.[6]
புர்பியர்களின் துப்பாக்கி நிபுணத்துவம் காரணமாக மால்வா ஆட்சியாளர்களும் ஆர்வத்துடன் இவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ப்தில் அதிக ஆர்வம் காட்டினர். இந்த நிபுணத்துவம் அவர்களின் சொந்த பகுதிகளில் உப்பு எளிதில் கிடைப்பதால் பெறப்பட்டிருக்கலாம். [7][8]
பெரும்பாலான புர்பியர்கள் கூலிப்படையினராக இருந்தனர். இவர்களின் சேவைகளுக்காக ஊதியம் பெற்றனர். ஆனால் சிலர் சிறிய சமஸ்தானங்களின் உண்மையான மன்னர்களாக இருந்தனர்.[9] மால்வாவிலிருந்து இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் இப்பகுதிக்கு பெரிய அளவில் புர்பியா சிப்பாய்களைக் கண்டது. மால்வாவில் உள்ள பல உள்ளூர் தலைவர்கள் சில்ஹாடி போன்ற புர்பியா வீரர்களை பெரிதும் நம்பியிருந்தனர்.[6] 1535 இல் குஜராத் சுல்தானகத்தின் பகதூர் ஷாவின் இராணுவத்தில் இவர்கள் பணியாற்றியதாக 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[10]
பிரித்தானிய இந்தியா மற்றும் மராட்டியப் பேரரசு போன்ற பல்வேறு ஆட்சியாளர்களுக்கு கூலிப்படையினராக நியமிக்கப்படுவதில் புர்பியாக்கள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர்.[11][12] வங்காள இராணுவத்தில் பெரும்பான்மையாக புர்பியாக்கள் இருந்தனர்.[12] 1857க்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் புர்பியா வீரர்களை நியமிக்க விரும்பியது. நிறுவனம் இவர்களை "இந்துக்கள் மற்றும் முஸ்லிம் போராளி பழங்குடியினர்" அல்லது வெறுமனே "கிழக்கத்தியர்கள்" என்று பெயரிட்டது.[13][14] கிழக்கிந்திய நிறுவனத்தின் வங்காள இராணுவம் தனது சிப்பாய்களை அவத் , பீகாரின் பிராமணர்கள் மற்றும் இராஜபுத்திரர்களிடம் பணிபுரிந்தவர்களை நியமிக்க விரும்பியது. ஏனெனில் அவர்கள் சராசரியாக 5 '8' உயரத்தைக் கொண்டிருந்தனர். இது இராணுவத்தில் வீரர்களிடையே ஈர்க்கக்கூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Waltraud Ernst. India's Princely States: People, Princes and Colonialism.
- ↑ M. S. Naravane (1999). The Rajputs of Rajputana: A Glimpse of Medieval Rajasthan.
- ↑ Deepak Solanki (2016). "Dr Gynaeshwari Devi Memorial Prize Paper". Proceedings of the Indian History Congress 77: 298–305.
- ↑ Roy. Hinduism and the Ethics of Warfare in South Asia: From Antiquity to the Present.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Dirk H.A. Kolff (2013). "Peasants fighting for a living in early modern North India". Fighting for a Living (Amsterdam University Press): 243–266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789089644527.
- ↑ 6.0 6.1 Dirk H. A. Kolff (8 August 2002). Naukar, Rajput, and Sepoy: The Ethnohistory of the Military Labour Market of Hindustan, 1450-1850. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52305-9.
- ↑ Ernst, Waltraud; Pati, Biswamoy (2007). India's Princely States: People, Princes and Colonialism. Routledge. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-11988-2.
- ↑ Roy, Kaushik (2014). Military Transition in Early Modern Asia, 1400-1750 Cavalry, Guns, Government and Ships. Bloomsbury Publishing. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780938134.
- ↑ M. S. Naravane (1999). The Rajputs of Rajputana: A Glimpse of Medieval Rajasthan. APH Publishing. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-118-2.
- ↑ Iqtidar Alam Khan (1999). "Re-examining the origin and group identity of the so-called "Purbias", 1500-1800". Proceedings of the Indian History Congress 60: 363–371.
- ↑ Alf Hiltebeitel (15 February 2009). Rethinking India's Oral and Classical Epics: Draupadi among Rajputs, Muslims, and Dalits. University of Chicago Press. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-34055-5.
- ↑ 12.0 12.1 Karsten, Peter (31 October 2013). Recruiting, Drafting, and Enlisting: Two Sides of the Raising of Military Forces. Routledge. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-66150-2.
- ↑ Roy, Kaushik; Lorge, Peter (2014-12-17). Chinese and Indian Warfare – From the Classical Age to 1870. Routledge. p. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317587101.
- ↑ Mason, Philip (1986). A Matter of Honour. Macmillan. pp. 229 & 573. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-41837-6.
- ↑ Roy, Kaushik (2012). Hinduism and the Ethics of Warfare in South Asia: From Antiquity to the Present. Cambridge University Press. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107017368.
மேலும் படிக்க
தொகு- M K A Siddiqui (ed.), Marginal Muslim Communities in India, Institute of Objective Studies, New Delhi (2004)
- Dasharatha Sharma Rajasthan through the Ages a comprehensive and authentic history of Rajasthan, prepared under the orders of the Government of Rajasthan. First published 1966 by Rajasthan Archives.