புற்றுநோயியல் சிறப்பு நூலகம்

புற்றுநோயியல் சிறப்பு நூலகம் (Special Library of Oncology) மத்திய ஐரோப்பாவின் சுலோவீனியாவில் அமைந்துள்ள ஒரு மைய புற்றுநோயியல் நூலகமாகும். 1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தலைநகரமான இலியுப்லியானாவில் புற்றுநோயியல் நிறுவனத்தின் தகவல் மற்றும் ஆவண மையமாக நிறுவப்பட்டது.[1]

புற்றுநோயியல் சிறப்பு நூலகம்
Special Library of Oncology
நாடுசுலோவீனியா
வகைபொது மருத்துவ நூலகம்
நோக்கம்புற்றுநோயியல்
தொடக்கம்1950
அமைவிடம்புற்றுநோயியல் நிறுவனம், சாலோசுகா செசுட்டா 5, லியுப்லியானா
Collection
Items collectedநூல் (எழுத்துப் படைப்பு)கள், கல்வி இதழ்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தரவுத்தளங்கள், மருத்துவக் கருவிகள்
அளவு15.000 புத்தகங்கள், 6.000 சந்தாக்கள்
Access and use
Population servedபுற்றுநோயியல் நிறுவனம், சாலோசுகா செசுட்டா 5, லியுப்லியானாவைச் சேர்ந்த மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்; சேகரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ள எவரும்.
ஏனைய தகவல்கள்
பணியாளர்கள்3
இணையதளம்www.onko-i.si/eng

சுலோவீனியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிற நூலகங்களின் மருத்துவர்கள், இலியுப்லியானாவைச் சேர்ந்த மருத்துவர்கள், பிற மருத்துவ நிறுவனங்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்; மருத்துவ மாணவர்கள், தொழில்முறை பயனர்கள், நூலகத்தின் சேகரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ள எவரும் தங்களது அன்றாட அறிவுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்முறை இலக்கியங்களை அணுகவும் நூலகத்தைப் பயன்படுத்தலாம்.[2][3]

புற்றுநோயியல் சிறப்பு நூலகம் சுலோவீனியன் நூலியல் பட்டியல் அமைப்பில் செயலில் உள்ள உறுப்பினராக இயங்குகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Onkološki inštitut v Ljubljani: 55 let: 1938-1993. Institute of Oncology Ljubljana. 1993. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 961-6071-00-9.
  2. "Special Library of Oncology". பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.
  3. Onkološki inštitut Ljubljana: 70 let: 1938-2008. Institute of Oncology Ljubljana. 2008. p. 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789616071505.
  4. Slovenian bibliographic cataloging system COBISS.si

புற இணைப்புகள்

தொகு