புலிமுகம் தேவி கோயில்
புலிமுகம் தேவி கோயில் இந்தியாவின் கேரள [1] மாவட்டத்தில் தாழவா பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இதன் மூலவர் பத்ரா பகவதி ஆவார். இக்கோயில் கருநாகப்பள்ளிக்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக இக்கோயிலை அடையலாம். [2]
துணைத்தெய்வங்கள்
தொகுகோயிலில் யட்சி, விநாயகர், நாகராஜா, நாக யட்சி, ராட்சசு உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. மேலும் சோதிட நிபுணர்களின் தேவ பிரஷ்னத்தின் படி சில சிலைகள்புதுப்பிக்கப்பட்டன அல்லது சேர்க்கப்பட்டுள்ளன.
காவி
தொகுஒரு காவு எனப்படுவதானது பாம்புக் கடவுள்கள் இருக்கும் ஒரு சிறிய காடாகவும், கரிம்பனா மரம், எழிலம் பலா மரம் ஆகியவற்றைக் கொண்டும் உள்ளதாகும். மேலும் கந்தர்வர்களும் யட்சிகளும் அங்கிருப்பதாக நம்பப்படுகிறது.
திருவிழாக்கள்
தொகுஇக்கோயிலில் பறையெடுப்பு, ஜீவித நல்லாத்து (ஊர்வலம்), மீன பரணி, பொங்கல் உள்ளிட்ட பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பறையெடுப்பின்போது உற்சவரை ஊர்வலமாகக் கொணர்வர். கோயில் மாதிரியில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு அங்கு காணப்படும். பல்லக்கு போன்ற இந்த அமைப்பில் உற்சவர் இருப்பார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pulimukham Devi Temple, Kollam, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
- ↑ "Pulimukham Devi Temple". பார்க்கப்பட்ட நாள் 16 March 2013.