புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி
புலியூர் சுப்பிரமணியம் நாராயணசுவாமி (Puliyur Subramaniam Narayanaswamy)(24 பிப்ரவரி 1934 - 16 அக்டோபர் 2020) என்பவர் கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி | |
---|---|
![]() பு. சு. நாராயணசுவாமி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி |
பிறப்பு | பெப்ரவரி 24, 1934 கோனேரிராஜபுரம், தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 அக்டோபர் 2020 | (அகவை 86)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | இசைக் கலைஞர் |
தொழில் தொகு
நாராயணசுவாமி, திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை, த. மா. தியாகராஜன் ஆகியோரிடமும், பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடமும் இசை கற்றார். இவர் மிகவும் பாராட்டப்பட்ட ஆசிரியராகவும் இருந்தார்.[1]
தனது 12 வயதில் பாலகான கலா ரத்தினம் பட்டம் பெற்றார். பின்னர் அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்தார்.[2] 1999ஆம் ஆண்டில், இசை அகாதமி இவருக்கு 'சங்கீத கலா ஆச்சார்யா' என்ற பட்டத்தினை வழங்கியது.[3] 2003-ல் இந்திய அரசால் இவருக்கு ’பத்ம பூசண்' விருதினை வழங்கியது.[1][4][5][6] ரஞ்சனி காயத்ரி, அபிசேக் ரகுராம், காயத்ரி வெங்கடராகவன், அமிர்தா முரளி, குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா மற்றும் அக்கரை சகோதரிகள் இவரது நன்கு அறியப்பட்ட சீடர்கள் ஆவர்.
நாராயணசுவாமி, 16 அக்டோபர் 2020 அன்று காலமானார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "Saluting a great teacher". The Hindu. 20 February 2014. http://www.thehindu.com/features/friday-review/music/saluting-a-great-teacher/article5709588.ece.
- ↑ "Musician-teacher par excellence". தி இந்து. 13 June 2003. http://www.thehindu.com/thehindu/fr/2003/06/13/stories/2003061301100400.htm.
- ↑ "Sangita Kala Acharya". https://musicacademymadras.in/awards/sangita-kala-acharya.
- ↑ "Kalam presents Padma awards". Rediff. 3 April 2003. http://www.rediff.com/news/2003/apr/03padma.htm.
- ↑ "Words of wisdom from a vidwan!". Narayana Vishwanath (New Indian Express). 10 December 2011. http://www.newindianexpress.com/cities/chennai/article232408.ece.
- ↑ "Vocalist, dance exponent honoured". தி இந்து. 15 December 2005. http://www.thehindu.com/2005/12/15/stories/2005121517660600.htm.[தொடர்பிழந்த இணைப்பு]