புளோராபாசுப்பாரிக் அமிலம்

புளோராபாசுப்பாரிக் அமிலம் (Fluorophosphoric acid ) என்பது H2PO3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற பாகுநிலை நீர்மமான இதை குளிர்வித்து திண்மமாக்கினால் ஒரு வகையான கண்ணாடியாக உருவாகிறது[1]

புளோரோபாசுப்போரிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோபாசுப்போனிக் அமிலம்
இனங்காட்டிகள்
13537-32-1
ChEBI CHEBI:30210
ChemSpider 22687
EC number 233-433-0
Gmelin Reference
100863
InChI
  • InChI=1S/FH2O3P/c1-5(2,3)4/h(H2,2,3,4)
    Key: DWYMPOCYEZONEA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24267
SMILES
  • OP(=O)(O)F
UNII IW87A7KU3R
பண்புகள்
FH2O3P
வாய்ப்பாட்டு எடை 99.985 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.818 கி/செ.மீ3
ஆம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தோல் மற்றும் கண்களுக்கு பாதிப்பு.
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H314, H330
P260, P264, P270, P271, P280, P284, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாசுப்பரசு பெண்டாக்சைடை ஐதரசன் புளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் புளோரோபாசுப்பாரிக் அமிலம் கிடைக்கிறது. பாசுப்பரசு ஆக்சி புளோரைடை[1] நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினாலும் புளோரோபாசுப்பாரிக் அமிலத்தைத் தயாரிக்கலாம். இவ்வினையில் முதலில் டைபுளோரோபாசுப்பாரிக் அமிலம் உருவாகிறது.

HPO2F2 + H2O → H2PO3F + HF

முழுமையான நீராற்பகுப்பு மூலம் பாசுப்பாரிக் அமிலத்தைப் பெறலாம்.

H2PO3F + H2O → H3PO4 + HF

வினைகள் தொகு

அமிலச் சம்நிலை சுட்டெண் (pKa) மதிப்பு 3.5 மற்றும் 8.5 என்ற அளவுகள் கொண்ட ஓர் இருகார அமிலமாக புளோரோபாசுப்பாரிக் அமிலம் கருதப்படுகிறது. இதனுடைய இணை காரங்கள் மோனோபுளோரோபாசுப்பேட்டுகள் ஆகும். நீராற்பகுப்பியலின் படி இவை திடமானவையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Fluorine Compounds, Inorganic, Phosphorus". Kirk‐Othmer Encyclopedia of Chemical Technology. (2000). DOI:10.1002/0471238961.1608151912091404.a01.