புளோரா புரோவினா
புளோரா புரோவினா ( Flora Brovina ) (பிறப்பு 30 செப்டம்பர் 1949) கொசோவோ அல்பேனியக் கவிஞரும், குழந்தை மருத்துவரும், பெண்கள் உரிமை இசுர்பிகா நகரில் பிறந்தார். மேலும் பிரிஸ்டினாவில் வளர்ந்தார். அங்கு மருத்துவம் படிக்கத் தொடங்கினார். குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றார். சாகிரேப்பில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பிறகு, கொசோவோவுக்குத் திரும்பி, அல்பேனிய மொழி தினசரி செய்தித்தாளான ரிலிண்ட்ஜாவில் பத்திரிகையாளராக சிறிது காலம் பணியாற்றினார். அதன்பிறகு, உடல்நலப் பாதுகாப்புத் தொழிலுக்குத் திரும்பினார். மேலும், பிரிஸ்டினா பொது மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
Flora Brovina | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1949 சிர்பிகா |
தொழில் | கவிஞர், குழந்தை மருத்துவர், பெண்கள் உரிமை ஆர்வலர் |
மொழி | அல்பானிய மொழி |
தேசியம் | கொசோவா அல்பேனியர் |
கொசோவோ போர்
தொகு1990 களில், கொசோவோவில் அரசியல் நிலைமை மோசமடைந்து சண்டை மூண்டதால், பிரோவினா, பிரிஸ்டினாவில் ஒரு சுகாதார மையத்தைத் தொடங்கினார். அதில் பாம்பு கடிக்கு மருத்துவம், காயங்களுக்கு மருந்தளித்தல், மகப்பேறு மருத்துவம் போன்ற பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தினார். மேலும் பல அனாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்த மையத்தைப் பயன்படுத்தினார். அவர்களில் பலர் சண்டை மற்றும் வெளியேற்றத்தின் போது பெற்றோரை இழந்தவர்கள். இவரும் இவரது சக ஊழியர்களும் ஒரே நேரத்தில் 25 குழந்தைகளை கவனித்துக் கொண்டனர்.
அரசியல்
தொகுகொசோவோ சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, புளோரா புரோவினா 2001 இல் கொசோவோவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு கொசோவோ ஜனநாயகக் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஹாஷிம் தாசிக்கு பதிலாக ஒரு மாற்று வேட்பாளாராக போட்டியிட்டார். [1] அப்போதிருந்து, இவர் கொசோவோ சட்டமன்றத்தின் ஒவ்வொரு காலத்திலும் உறுப்பினராக இருந்தார். [2] [3] [4] [5] [6] [7]
சான்றுகள்
தொகு- ↑ "Presidential battle in Kosovo". CNN. 2001-11-19. http://edition.cnn.com/2001/WORLD/europe/11/16/kosovo.poll/.
- ↑ Flora Brovina on the homepage of the Assembly of Republic of Kosovo
- ↑ First Legislation Period (17.11.2001 - 23.11.2004)
- ↑ Second Legislation Period (23.11.2004 - 12.12.2007)
- ↑ Third Legislation Period (13.12.2007 - 03.11.2010)
- ↑ Fourth Legislation Period (12.12.2010 - 07.05.2014)
- ↑ Fifth Legislation Period (17.07.2014-)
ஆதாரங்கள்
தொகு- Mcgwire, Scarlett (2001-11-15). "Kosovo's first lady". The Guardian (London). https://www.theguardian.com/Kosovo/Story/0,2763,593700,00.html.
- "Kosovar Pediatrician Flora Brovina Released from Prison". Archived from the original on 2006-05-17. பார்க்கப்பட்ட நாள் 2006-06-07.
- "Presidential battle in Kosovo". CNN. 2001-11-19. http://edition.cnn.com/2001/WORLD/europe/11/16/kosovo.poll/.