அல்பானிய மொழி

அல்பானியம் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது அல்பானியாவிலும் கொசோவோவிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ 7.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.

Albanian
Shqip
உச்சரிப்புவார்ப்புரு:IPA-sq
நாடு(கள்)Primarily in Southeastern Europe, and by the Albanian diaspora worldwide.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7.6 million[1]  (date missing)
Indo-European
  • Albanian
Latin alphabet (Albanian variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 அல்பேனியா
 கொசோவோ
and recognised as a minority language in:
 இத்தாலி
 மாக்கடோனியக் குடியரசு
 மொண்டெனேகுரோ
 உருமேனியா
 செர்பியா
Regulated byofficially by the Social Sciences and Albanological Section of the Academy of Sciences of Albania
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sq
ISO 639-2alb (B)
sqi (T)
ISO 639-3Variously:
sqi — Albanian (macro language)
aln — Gheg
aae — Arbëreshë
aat — Arvanitika
als — Tosk

இந்த மொழி தென் அல்பேனியாவில் டோஸ்க் (Toske) என்னும் உருவமும், வடக்கு ஆல்பேனியாவில் கெக் (Gheg) என்னும் உருவமும் உடையது. நானூறு ஆண்டுகளாக ஆண்டுவந்த துருக்கியர் அல்பேனிய நூல்களை வெளியிடலாகாது என்று தடுத்து, ஆல்பேனிய மொழி வளர்ச்சியைக் கெடுத்து வந்ததனர். ஆல்பேனிய மொழியில் நாடோடிப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஆல்பேனிய சட்ட உருவாக்குநர் லெக் (Lek) என்பவரைப் பற்றிப் பல இதிகாசங்களும் வரலாற்றுப் பாடல்களும் காணப்படுகின்றன. ஆனால், மக்கள் பெரிதும் விரும்புவது ஸ்கான்டர்பெக் (Skanderbeg, 1410-1467) என்பவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியவைகளே ஆகும். அவர்தாம் துருக்கியரை நாட்டுக்குள் நுழைய வொட்டாமல் பல்லாண்டுகளாகச் சண்டையிட்டவர். பண்டைய கவிகளும் இக்காலக் கவிகளும் அவரையே தேசியப் பெருவீரராகக் கருதுகின்றனர்.

பிரான்சிஸ்கர் என்னும் சமய போதகர்கள் அல்பேனிய மொழியில் எழுதிய சமய நூல்களை அச்சிடத் துருக்கிய அரசர்களிடம் இசைவுபெற்ற பிறகே அல்பேனிய மொழியில் நூல்கள் எழுதப்படலாயின. 1841ஆம் ஆண்டில் இயேசு சங்கத்தார் (Jesuits) மற்ற நூல்களை அச்சிட அனுமதி பெறும்வரை தோன்றியவை அனைத்தும் சமய நூல்களாகவே இருந்தன.

கிரோலாமா டி. ராடா (Girolama De Rada. 1813-1903) என்பவர் இத்தாலியில் வாழ்ந்த அல்பேனியர். அவர் முதலில் நாடோடிப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டார். பிறகு தாமே கவிதைகள் வரைந்தார். அவரைப் போலவே முதலில் நாடோடிப் பாடல்களும், பிறகு சொந்தக் கவிதையும் வெளியிட்ட மற்றொருவர் கியேர்கி பிஷ்ட்டா (Gjergi Fishta. 1856-1941) ஆதிமுதல் ஆல்பேனிய மக்கள் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்பதை அவர் தம் நூல்களில் அழகாக எழுதியுள்ளார். பாசிஸ்ட் இத்தாலியர்கள் ஆல்பேனியாவை 1939 இல் கைப்பற்றிய காலத்தில் அவர் அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டார். அவருடன் சேர்ந்த வின்சென்க் ப்ரெனுஷி வெளியிட்டுள்ள நாடோடிப் பாடல் தொகுதி புகழ் பெற்றதாகும்.

பெர்லின் கவுன்சிலில் ஆல்பேனியாவைப் பிரித்த பொழுது எழுத்தாளருள் பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியே ஓடவேண்டியவர்களானார்கள். அவர்கள் தங்கள் நூல்களைச் சோபியாவில் அச்சிட்டு மறைவாகத் தம் நாட்டுக்கு அனுப்பி வந்தனர்.

இவ்வாறு செய்தவர்களுள் ஒருவரான சாமி பே பிராசேரி (Sami Bey Frasheri) என்பவர் எழுதிய பேஸா (Besa) என்னும் நாடகம் விடுதலைப் பற்றுடைய பாமர மக்களுடைய வீரத்தையும் அதிகாரத்துக்கு அடங்கி நடக்கும் மக்களுடைய கோழைத்தனத்தையும் உணர்ச்சி ததும்பச் சித்திரிக்கின்றது. அவருடைய சகோதரன் நெயிம் பிராஷேரி (Naim Frasheri 1846-1901) பல கவிதைகள் இயற்றினார். அவர் அயல் நாட்டிலேயே வறுமையால் மாண்டார். பாஸ்கோ வாசா பாஷா (Pasko Vasa Pasha) என்பவர் தாம் 'என் ஆல்பேனியா' என்னும் ஆல்பேனிய நாட்டுப் பண்ணை இயற்றியவர்.

ஆல்பேனிய விடுதலைக்காக வெளிநாடுகளில் இருந்துகொண்டு உழைத்த எழுத்தாளர்களுள் சிறந்தவர்கள் பயிக் கொனிட்ஜா (Faik Konitze) என்பவரும், பான் எஸ். நோலி (Fan S. Noli) என்பவரும் ஆவர். பான் எஸ். நோலி, சேக்ஸ்பியர், இப்சன் முதலியோர் எழுதிய காவியங்களை மொழிபெயர்த்தும், சிறந்த மொழித்தொண்டு செய்து அல்பேனிய மொழியின் சொல் வளத்தைப் பெருக்கியும் அம்மொழியை இலக்கிய உருவாக்கத்துக்கு ஏற்ற மொழியாக ஆக்கினார். பிற்காலதிய கவிஞர்களுள் சிறந்தவர்கள் அலிஅஸ் லானி, ஸ்கெண்டர் பார்தி (Skender Bardhi) ஆகியவர்கள். பேஸா என்னும் நாடகத்தைப் பார்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதுதான் ஆல்பேனிய நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு.[2]

குறிப்புகள்

தொகு
  1. Gheg 4,156,090 + Tosk 3,035,000 + Arbereshe 260,000 + Arvanitika 150,000 = 7,601,090. (Ethnologue, 2005)
    Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International.
  2. தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி 1, பக்கம் 486
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பானிய_மொழி&oldid=3592578" இலிருந்து மீள்விக்கப்பட்டது