புளோரோபென்சால்டிகைடு

வேதிச் சேர்மங்களின் குழு

புளோரோபென்சால்டிகைடு (Fluorobenzaldehyde) என்பது புளோரினேற்றம் அடைந்த பென்சால்டிகைடின் மூன்று அமைப்பொத்த மாற்றியங்களின் குழுவாகும்.

பண்புகள்

தொகு

மாற்றியங்கள் புளோரின் அணுவின் இருப்பிடத்தில் வேறுபடுகின்றன. ஆனால் இவை ஒரே மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகின்றன.

புளோரோபென்சால்டிகைடு மாற்றியங்கள்
பெயர் ஆர்த்தோ-புளோரோபென்சால்டிகைடு மெட்டா-புளோரோபென்சால்டிகைடு பாரா-புளோரோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
 
 
 
வேதிப் பெயர் 2-புளோரோபென்சால்டிகைடு 3-புளோரோபென்சால்டிகைடு 4-புளோரோபென்சால்டிகைடு
மூலக்கூற்று வாய்பாடு C7H5FO C7H5FO C7H5FO
வாய்ப்பாட்டு எடை 124.11 கி/மோல் 124.11 கி/மோல் 124.11 கி/மோல்
சிஏஎசு எண் 446-52-6 456-48-4 459-57-4
ஈசி எண் 207-171-2 207-266-9 459-57-4
பண்புகள்
உருகுநிலை -44.5°செல்சியசு -10°செல்சியசு
கொதிநிலை 175°செல்சியசு 173°செல்சியசு 181°செல்சியசு
தீப்பற்றும் வெப்பநிலை 55°செல்சியசு 56°செல்சியசு 56°செல்சியசு
அடர்த்தி 1.18 கி/செ.மீ3 1.174 கி/செ.மீ3 1.175 கி/செ.மீ3

தயாரிப்பு

தொகு

4-புளோரோபென்சால்டிகைடு மாற்றியங்களை 4-குளோரோபென்சால்டிகைடை ஆலசன்-பரிமாற்ற வினைக்கு உட்படுத்துவதன் மூலம் உருவாக்க முடியும்.[1]

பயன்கள்

தொகு

புளோரோபென்சால்டிகைடை ஒரு செயற்கை இடைநிலையாகப் பயன்படுத்தலாம்.[1] ஏனெனில் புளோரினை ஆக்சிசனேற்ற வினை மூலம் இடம் மாற்றலாம். ஆல்டிகைடு குழு இருப்பதன் காரணமாக, புளோரோபென்சால்டிகைடுகள் ஒடுக்க வினையின் மூலம் பல்வேறு இசுகிப் காரக் கலவைகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. ஆலசனேற்றப்பட்ட அரோமாட்டிக்கு வளையங்களைக் கொண்ட இசுகிப் காரங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Yoshida, Yasuo; Kimura, Yoshikazu (1989-08-01). "An improved and practical synthesis of 4-fluorobenzaldehyde by halogen-exchange fluorination reaction" (in en). Journal of Fluorine Chemistry 44 (2): 291–298. doi:10.1016/S0022-1139(00)83946-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/pii/S0022113900839469. 
  2. Singh, Kiran (2006). "Antibacterial Co(II), Ni(II), Cu(II) and Zn(II) Complexes of Schiff bases Derived from Fluorobenzaldehyde and Triazoles". Journal of Enzyme Inhibition and Medicinal Chemistry 21 (5): 557–562. doi:10.1080/14756360600642131. பன்னாட்டுத் தர தொடர் எண்:1475-6366. பப்மெட்:17194027. 
  3. Patel, Ishwar J.; Parmar, Shailesh J. (2010). "Synthesis and Studies of Novel Optically Active Schiff's Base Derivatives and their Antimicrobial Activities". e-Journal of Chemistry 7 (2): 617–623. doi:10.1155/2010/956242. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-4945. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோபென்சால்டிகைடு&oldid=3842191" இலிருந்து மீள்விக்கப்பட்டது