புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புள்ளம்பாடியில் இயங்குகிறது [1]
மக்கள் வகைப்பாடு தொகு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,137 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 15,054 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 148 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள் தொகு
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆலம்பாக்கம்
- ஆலம்பாடி
- இ. வெள்ளனூர்
- ஊட்டத்தூர்
- எம். கண்ணனூர்
- என். சங்கேந்தி
- ஒரத்தூர்
- கண்ணாகுடி
- கருடமங்கலம்
- கல்லகம்
- காணக்கிளியநல்லூர்
- கீழரசூர்
- குமுளூர்
- கோவாண்டகுறிச்சி
- சரடமங்கலம்
- சிறுகளப்பூர்
- தாப்பாய்
- திண்ணகுளம்
- தெரணிபாளையம்
- நம்புகுறிச்சி
- நெய்குளம்
- பி.கே. அகரம்
- பி. சங்கேந்தி
- புதூர்பாளையம்
- பெருவளப்பூர்
- மால்வாய்
- முதுவத்தூர்
- மேலரசூர்
- ரெட்டிமாங்குடி
- வந்தலைகூடலூர்
- வரகுப்பை
- விரகாலூர்
- வெங்கடாசலபுரம்