புவன் ஷோம்

1969 ஆண்டு வெளியான இந்தி திரைப்படம்

புவன் ஷோம் என்பது 1969 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி நாடகத் திரைப்படம் ஆகும். மிருணாள் சென் இயக்கிய இப்படத்தில் உத்பால் தத் (புவன் ஷோம்) மற்றும் சுஹாசினி முலே (கௌரி, கிராமத்து பெண்) ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர். சென் இப்படத்திற்கான கதையாக பாலை சந்த் முகோபாத்யாவின் பாணபூலின் என்ற வங்க சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார். இப்படமானது நவீன இந்திய திரைப்படங்களின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. [1]

புவன் ஷோம்
இயக்கம்மிருணாள் சென்
தயாரிப்புமிருணாள் சென் புரோடக்சன்ஸ்
கதைபாலசந்த் முகோபத்யாய
கதைசொல்லிஅமிதாப் பச்சன்
இசைவிஜய் ராகவ் ராவ்
நடிப்புஉத்பால் தத்
சுஹாசினி முலே
ஒளிப்பதிவுகே.கே.மகாஜன்
வெளியீடுமே 12, 1969 (1969-05-12)
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

இது சுஹாசினி முலேவின் அறிமுகப் படம். இப்படத்தில் அமிதாப் பச்சன் பின்னணி குரல் கொடுத்தார்.

புவன் ஷோம் மனைவியை இழந்த நடுத்தர வயதுள்ள அர்ப்பணிப்புள்ள அரசு ஊழியர் ஆவார். இவர் இந்திய ரயில்வேயில் பணிபுரியும் கண்டிப்பான ஒரு "உயர் அதிகாரி". ஒரு சில தொடருந்து பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவரை கண்டிப்பான, பழைமைவாத அதிகாரி ("அப்சர்") என்று விவாதிக்கும் சூழலில் படத்தின் பின்னணி கட்டப்பட்டுள்ளது. அவரது வயது, 50 களின் பிற்பகுதியாக உள்ளது. இது அவரது உளவியலின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.

பணிச்சுமையில் இருந்து விடுபட வேட்டையாடும் யோசனையோடு புவன் ஷோம் குஜராத்திற்கு "வேட்டை விடுமுறை"க்கு செல்கிறார். அவர் ஒரு வேட்டையாடுவதில் தகுதியற்ற "வேட்டைக்காரனாக" சித்தரிக்கப்படுகிறார்.

இளம் கௌரியுடனான அவரது சந்திப்பு அதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் அவள்தான் அவரைக் கவனித்து, அவர் பறவைகளை "வேட்டையாட" உதவுகிறாள். அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக்கொள்கிறாள். அழுத்தங்கள் நிறைந்த புனின் வாழ்வில் கௌரியின் நுழைவும் அவளது அன்பும் அற்புதமான தருணங்களை அவருக்கு அளிக்கின்றன.

புவன் ஷோம் கௌரியால் பெரிதும் ஈர்க்கபடுகிறார் அவர் அந்த கிராமத்து சூழல் மெல்ல மெல்ல அவரை உருமாற்றுகின்றன. மேட்டிமைத் தனமும் அதிகாரத் திமிரும் கரைந்துபோய், முற்றிலும் புதிய மனிதராக கிராமத்திலிருந்து நகரத்துக்கு திரும்புகிறார்.

அவர் அலுவலகத்துக்கு திரும்பியதும், பணியழுத்தம் மிகுந்த வாழ்விலிருந்து தன்னால் வெளியேறி ஓடிவிடமுடியாது என்பதை உணர்கிறார். சிற்றூர் பெண்ணாக அழகிய கௌரியின் புன்னகை அவரது நினைவுகளில் வந்து போகிறது.

கருப்பொருட்கள்

தொகு

புவன் ஷோம் இந்திய புதிய அலையின் முன்னோடியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவி பெற்ற துவக்கக் கால படங்களில் இதுவும் ஒன்றாகும். ஏகபோகம், தனிமை, நட்புறவு, இரக்கம் ஆகியவற்றை கருப்பொருள்களாக இந்த படம் கையாள்கிறது. இது இந்தியாவில் கிராமப்புற-நகர்ப்புற பிளவுகளையும் காட்டுகிறது.

விருதுகள்

தொகு

குறிப்புகள்

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவன்_ஷோம்&oldid=3953242" இலிருந்து மீள்விக்கப்பட்டது