பு. தி. நரசிம்மாச்சார்
புரோகித திருநாராயண நரசிம்மாச்சார் (Purohita Thirunarayana Narasimhachar) (1905 மார்ச் 17 - 1998 அக்டோபர் 23 ) பொதுவாக புதிந என்று அழைக்கப்படும் இவர் ஓர் நாடக ஆசிரியரும் மற்றும் கன்னட மொழி கவிஞரும் ஆவார். குவெம்பு மற்றும் த. ரா. பேந்திரே ஆகியோருடன் கன்னட நவோதயா கவிஞர்களில் நன்கு அறியப்பட்ட மூவராக இருந்தார்.[1] இவர் ஒரு சாகித்ய அகாதமி சகாவாகவும் மற்றும் 1991இல் கர்நாடக அரசு வழங்கிய பம்பா விருதை வென்றவரும்ஆவார்.[2]
பு. தி. நரசிம்மாச்சார் (பு தி ந) | |
---|---|
பிறப்பு | மேல்கோட்டை, பாண்டவபுரா வட்டம் , மண்டியா மாவட்டம், கர்நாடகா | 17 மார்ச்சு 1905
இறப்பு | 13 அக்டோபர் 1998 பெங்களூர், கர்நாடகா | (அகவை 93)
தேசியம் | இந்தியா |
பணி | எழுத்தாளர், கவிஞர் |
அரசியல் இயக்கம் | கன்னடம்: நவோதயா |
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுபுதிந 1905 மார்ச் 17 அன்று கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை என்ற ஊரில் ஒரு கட்டுப்பாடான ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார்.[3]
ஒரு எழுத்தாளர் என்பதைத் தவிர, புதிந மைசூர் மாநில இராணுவத்திலும் பின்னர் மைசூர் மாநில சட்டமன்றத்திலும் பணியாற்றினார்.[4] இவர் 1998 அக்டோபர் 23, அன்று காலமானார். [ மேற்கோள் தேவை ]
இலக்கிய பங்களிப்புகள்
தொகுபுதிந கன்னட இலக்கியத்தின் நவோதயா பாணியின் வினையூக்கிகளில் ஒருவராக இருந்தார். இலட்சுமிநாராயண பட் என்பவரின் கருத்துப்படி, "ஒரு பரந்த அளவில், நவோதயா பாணியிலான இலக்கியத்தின் வளர்ச்சி புதிநவின் எழுத்துக்களின் வளர்ச்சியை ஒத்திருக்கிறது".[5] அனாதே என்ற இவர் தனது முதல் கவிதைத் தொகுப்பில், ஒரு எளிய மொழியையும் பாணியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க தருணங்களைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகிறார். புதிநவின் பல எழுத்துக்கள் இயற்கையின் அழகையும் கம்பீரத்தையும் விவரிக்கின்றன. ஆன்மீகத்தின் எல்லையில் உள்ளன.[6] இவரது நன்கு அறியப்பட்ட இரண்டு எழுத்துக்கள் காமம் மற்றும் தர்மத்திற்கு இடையிலான மோதலை நுட்பமாக விவரிக்கும் 'அகாலி', மற்றும் கோகுலத்திலிருந்து கிருட்டிணர் வெளியேறியதை விவரிக்கும் 'கோகுலா நிர்கமனா' ஆகிய இரண்டுமாகும்.[7] புதிநவின் கட்டுரைகள் இவரது மேலாதிக்க கவிதை ஆளுமையை பிரதிபலிக்கின்றன.[8]
விருதுகள்
தொகுகுறிப்புகள்
தொகு- K. M. George (1992) [1992]. Modern Indian Literature, an Anthology: Surveys and poems. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-324-0.
- P. T. Narasimhachar (2001) [2001]. Hill Temple. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0814-8.
- Amaresh Datta (1988). Encyclopaedia of Indian literature vol. 2. சாகித்திய அகாதமி. p. 1142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1194-7.
- Sisir Kumar Das, various (1995). A History of Indian Literature. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-798-7.
- Documentary by Chadrashekhar Kambar
மேற்கோள்கள்
தொகு- ↑ K. M. George (1992), p642
- ↑ P. T. Narasimhachar (2001), Back cover
- ↑ "Birth centenary of PuTiNa". ThatsKannada.com. Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
- ↑ "House of PuTiNa at Melkote is a cultural icon". ThatsKannada.com. Archived from the original on 20 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "An analysis of Pu. Ti. Narasimhachar's work". OurKarnataka.com. Archived from the original on 5 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 21 March 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ K. M. George (1992), p174
- ↑ Sisir Kumar Das (1995), p766
- ↑ Amaresh Datta (1988), p1220
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.