விலங்கியலில், பூஉண்ணி என்பது முதன்மையாகப் பூக்கள் சார்ந்த பொருட்களை உண்ணும் விலங்குகளை குறிப்பதாகும். இவை ஒரு வகையான தாவரவுண்ணிகளாகும். இவை ஒரு குறிப்பிட்ட பூ உணவு உண்ணும் பழக்கத்திற்கு உட்பட்டவையாகத் தாவர உணவு உண்ணும் வரம்பில் உள்ளன (பெரும்பாலும் இவை மலர் தாவரவுண்ணி எனக் குறிப்பிடப்படுகிறது). [1]

  • தானியவுண்ணி : தானியம், விதைகளை நுகர்பவை
  • நெக்டரிவோரி : மலர் அமிர்தத்தினை நுகர்வு
  • பாலினிவோரி : மலர் மகரந்தத்தின் நுகர்பவை
  • பிரங்கிவோரி: பழம் நுகர்பவை

உணவு

தொகு

ஒரு பூஉண்ணியின் உணவில் அதிக அளவில் மேலே குறிப்பிடப்பட்ட பூ சார்ந்த உணவுப்பொருட்கள் உள்ளன. ஆனால் பட்டை, வேர்கள் சார்ந்த பொருட்களும் உள்ளன. பல பல பூஉண்ணிகள் அனைத்துண்ணிகளாகவும் இருக்கின்றன; அதாவது இவற்றின் உணவுகளில் பல்வேறு சிறிய பூச்சிகளும் கூடுதலாக இருக்கலாம்.[2]

எடுத்துக்காட்டுகள்

தொகு

சிட்டாசின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான பறவைகள் பூஉண்ணிகள் வகையின.[3] இதில் பெரும்பாலான கிளிகள், பராகீட், பஞ்ச வண்ணக் கிளி மற்றும் கொண்டை கிளிகள் ஆகும். ஓசனிச்சிட்டு, தொல்லுலகச் சிட்டுகள், தூக்கான் இதர பூசார்ந்தவைகளை உண்ணுபவை. நண்டு உண்ணும் குரங்கு மொரிசியசில் ஆக்கிரமிப்பு பூ உண்ணும் உயிரியாகக் கருதப்படுகிறது. இது ஆபத்தான, உள்ளூர் ரூசியா சிம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பூர்வீக தாவரங்களின் பூக்களை அதிக அளவில் உண்ணுகிறது.[4]

 
கிளி : பூஉண்ணி, அனைத்துண்ணி.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bird Products | Popular bird products for a happier pet". Pluspets.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
  2. "Basic Nutrition for Psittacines (Parrot Family)". Animal Planet. 2012-05-15. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
  3. "Top 10 Nutrition Tips for birds - Blog - Howard Springs Vet". Howardspringsvets.com.au. Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
  4. Bissessur, Prishnee; Bunsy, Y.; Baider, C.; Florens, F.B.V. (2019). "Non-intrusive systematic study reveals mutualistic interactions between threatened island endemic species and points to more impactful conservation". Journal for Nature Conservation 49: 108–117. doi:10.1016/j.jnc.2019.04.002. 

வெளி இணைப்புகள்

தொகு

நூலியல்

தொகு
  • ஜி.பி. செப்லிக் எழுதிய தாவர பரிணாம சூழலியல் அணுகுமுறைகள்
  • கோழி ஊட்டச்சத்து: கே.சி. கிளாசிங்கின் ஒப்பீட்டு அணுகுமுறை (விலங்கு அறிவியல் துறை, கலிபோர்னியா பல்கலைக்கழகம், டேவிஸ், கலிபோர்னியா 95616, 2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஉண்ணி&oldid=3564508" இலிருந்து மீள்விக்கப்பட்டது