தீ மிதித்தல்

(பூக்குழி இறங்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். இதனை அக்னி குண்டம் இறங்குதல், பூமிதித்தல் என்ற பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இவ்வாறு தீ மிதிப்பவர்களை மருளாளிகள் என அழைக்கின்றார்கள். [1]

தீ மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருக்கின்றார்கள். அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களின் போது, சாமியாடிக் கொண்டு நீர்நிலைகளிலிருந்து நீராடி மாலையணிந்து பூக்குழிக்கு வருகின்றார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்துகொண்டு வரிசையாக பூக்குழிக்குள் இறங்குகிறார்கள்.

இவ்வாறு பூக்குழி இறங்குபவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, அதில் விழுந்தாலோ அவை அபசகுணமாக கருதப்படுகிறது.

ஆதாரங்கள்தொகு

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=21692
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_மிதித்தல்&oldid=2090337" இருந்து மீள்விக்கப்பட்டது