பூசந்தி (isthmus)[1] என்பது கடல் போன்ற நீர்நிலைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் இரண்டு பெரிய நிலப்பகுதிகளை இணைத்து கடலை பிரிக்கும் ஒரு சிறிய குறுகிய நிலப்பகுதி ஆகும்.[2] பண்டைய கிரேக்க மொழியில் isthmos  என்ற வார்த்தை 'கழுத்து" என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.[3] டோம்போலோ (tombolo) என்று அழைக்கப்படும், தடுப்பனால் கரையோடு இணைக்கப்பட்ட சிறு தீவு போன்ற அமைப்பும் நீரிணையும் பூசந்தியின் சகாக்களாக கருதப்படுகிறது.

ஆத்திரேலியா, தாசுமேனியாவில் வரக்கு, தெற்கு புரூணி தீவை இணைக்கும் பூசந்தி.

பொதுவாக கடல்களை இணைக்கும் கால்வாய்கள் கப்பல் போக்குவரத்தின் பயண தூரத்தை, குறுக்கு வழியே வெகுவாக குறைக்கும் நன்மையை கருதி பூசந்தியின்  ஊடாகவே கட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக பனாமா கால்வாய் அத்திலாந்திக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் பனாமா பூசந்தியின் குறுக்காகவே கட்டப்பட்டுள்ளது. மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயசு கால்வாய், சீனாய் தீபகற்பத்தினால் உருவான சூயஸ் பூசந்தியின் மேற்குப் பகுதியை வெட்டி எடுக்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூசந்திகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Isthmus". Collins English Dictionary. Collins. பார்க்கப்பட்ட நாள் 19-12-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Isthmus". Britannica. பார்க்கப்பட்ட நாள் 22-09-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. LSJ entry ισθμός
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசந்தி&oldid=3855756" இலிருந்து மீள்விக்கப்பட்டது