பூசி அணை
பூசி அணை (Bhushi Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள லோணாவ்ளாவில் உள்ள இந்திராயாணி ஆற்றின் மீது கட்டப்பட்ட கட்டுமான அணையாகும்.[2] 2014-ல், இந்திய இரயில்வே தனியார்த் துறையின் பங்கேற்புடன் பூசி அணையைச் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தும் திட்டத்தை அறிவித்தது.
பூசி அணை Bhushi Dam | |
---|---|
அணையின் அருகே சுற்றுலா வந்த மக்கள் கூட்டம் | |
அமைவிடம் | லோணாவ்ளா, மகாராட்டிரம், இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 18°43′21.86″N 73°23′47.26″E / 18.7227389°N 73.3964611°E |
திறந்தது | 1860s[1] |
உரிமையாளர்(கள்) | மத்திய ரயில்வே |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | இந்திராயாணி ஆறு |
வரலாறு
தொகு1860களின் பிற்பகுதியில் கிரேட் இந்தியன் பெனின்சுலார் இரயில்வேயின் நீராவி இயந்திரங்களுக்கான நீர் ஆதாரமாக இந்த அணை கட்டப்பட்டது. 2014-ல் கிரேட் இந்தியன் தீபகற்ப இரயில்வேயின் வாரிசான இந்திய இரயில்வேயின் மத்திய இரயில்வே மண்டலத்திற்குச் சொந்தமானது.
நீர்த்தேக்கத்திலிருந்து லோணாவ்ளா, கண்டாலா மற்றும் இரயில்வேயின் மறுபுறம் செல்லும் நிலையத்திற்கு வார்ப்பிரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. நகராட்சி நிதியைப் பயன்படுத்தி அணை கட்டப்பட்டதால், லோணவ்ளா நகரத்திற்கும் சிறிது தண்ணீர் வழங்க ரயில்வே நிறுவனம் பின்னர் ஒப்புக்கொண்டது.[2]
2011ஆம் ஆண்டில், இந்தியக் கடற்படை இதன் அருகே அமைந்துள்ள இந்தியக் கடற்படை நிலையமான சிவாஜியில் தன் பயிற்சி நடவடிக்கைகளுக்காகப் பூசி அணை மற்றும் புகான் ஏரியைக் கையகப்படுத்த முன்மொழிந்தது. இவ்வாறான நடவடிக்கையானது அணைக்குப் பொதுமக்கள் செல்வதைக் கட்டுப்படுத்தும் என லோணவ்ளா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டில், மகாராட்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் 9 கிலோமீட்டர்கள் (5.6 மைல்கள்) நீளமான சுரங்கப்பாதையை அமைக்க முன்மொழிந்தது. இது பூசி அணைக்குக் கீழே செல்லும்.
விபத்துக்கள்
தொகுபூசி அணையில் அடிக்கடி நீரில் மூழ்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. 2012ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஐந்து ஆண்டுகளில் 25 பேர் இறந்துள்ளனர்.
இந்த விபத்துகளைக் குறைப்பதற்காக, லோணாவ்ளா காவல்துறை மற்றும் ரயில்வே அணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்தது, மேலும் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது அருந்துவதற்குத் தடை விதித்தது.[3] இதையடுத்து, மதியம் 3 மணிக்கு மேல் அப்பகுதியில் வாகனங்கள் செல்லவும், 5 மணிக்கு மேல் அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பார்வையாளர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.[4]
வழக்கமாகக் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அணையைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். உள்ளூர் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் இப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rain spreads cheer in Pune and Pimpri, tourists throng Bhushi dams". இந்தியன் எக்சுபிரசு. 17 July 2014. http://indianexpress.com/article/cities/pune/rain-spreads-cheer-in-pune-and-pimpri-tourists-throng-bhushi-dam/. பார்த்த நாள்: 4 December 2014.
- ↑ 2.0 2.1 "Gazetteer of the Bombay Presidency - Poona - Chapter VI - Trade - Communication - Railway". Bombay: Gazetteer Department, Government of Maharashtra. 1885. Archived from the original on 28 January 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
- ↑ Deshmukh, Chaitraly (19 June 2014). "A must read for those planning to visit Lonavla". Daily News and Analysis (Pune). http://www.dnaindia.com/pune/report-a-must-read-for-those-planning-to-visit-lonavla-1996560. பார்த்த நாள்: 4 December 2014.
- ↑ "No revellers at Bhushi dam site after 5pm: Cops". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Pune). 14 August 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/No-revellers-at-Bhushi-dam-site-after-5pm-Cops/articleshow/40218057.cms. பார்த்த நாள்: 4 December 2014.
- ↑ . Pune.