பூஜாப்புரம் இரவி

இந்திய நடிகர்

இரவீந்திரன் நாயர் (Raveendran Nair) தனது மேடைப் பெயரான பூஜாப்புரம் ரவி (Poojappura Ravi) என பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய நடிகராவார். முதன்மையாக மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் கவனம் செலுத்துகிறார்.[1] மேடை நடிகராக இருந்த இவர் "கலாநிலையம் டிராமா விஷன்" என்ற பிரபல நாடக நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தார். 1970களின் நடுப்பகுதியில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கேரளாவில் தயாரிக்கப்பட்ட பல "கருப்பு வெள்ளை" திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர், பெரும்பாலும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படங்களின் பட்டியலின் சரியான எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை என்றாலும், இவர் 600 படங்களை தாண்டிவிட்டார். 1990களில் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் மலையாளத் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் பரபரப்பான நடிகராக இருக்கிறார்.

பூஜாப்புரம் இரவி
பிறப்புஇரவீந்திரன் நாயர்
1947 (அகவை 76–77)
அக்டோபர் 28, 1947 (1947-10-28) (அகவை 76)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்இரவி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1975 – தற்போது வரை
பெற்றோர்
  • மாதவன் பிள்ளை
  • பவானியம்மா

தொழில் தொகு

இவரது சிறந்த கதாபாத்திரம் 1992 இல் வெளிவந்த கல்லன் கப்பலில் தானே- என்ற படத்தில் சுப்பிரமணியம் சுவாமி என்ற வேடத்தில் இருந்தது.[2] 1978- இதோ ஒரு மனுஷ்யன், 1979- ஜீவிதம் ஓரு கணம், 1985-கீர்த்தனம், 1985-பாதமுத்யம், 1988-சாரவலயம் போன்றத் திரைப்படங்களில் குட்டன் பிள்ளை என்ற காவலர் வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இரவி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புரத்தில், மாதவன் பிள்ளை, பவானியம்மா ஆகியோருக்குப் நான்கு குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். சின்னம்மா நினைவு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், திருமலை மேல்நிலைப்பள்ளியிலும் தொடக்கக் கல்வியைப் பெற்றார். இவருக்கு தங்கம்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இலட்சுமி என்ற ஒரு மகளும், ஹரி குமார் என்றஒரு மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Good comedy films will never fail: Poojappura Ravi". malayalamrocks.com. 30 September 2011. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-11-10.
  2. https://www.youtube.com/watch?v=22yri_4Rh-Q

வெளி இணைப்புகள் தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பூஜாப்புரம் இரவி 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜாப்புரம்_இரவி&oldid=3564709" இலிருந்து மீள்விக்கப்பட்டது