பூஜாப்புரம்

பூஜாப்புரம் (Poojappura) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின்திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது "திருவனந்தபுரத்தின் ஆன்மா" என்று அழைக்கப்படுகிறது. இது நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஜகதி, கரமனை, முடவன்முகல் மற்றும் திருமலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் ஒரு காலத்தில் விஜயதசமி பண்டிகை காலங்களில் வழிபாட்டு இடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நவராத்திரி நோன்பின் போது திருவிதாங்கூர் மன்னர் இங்கு வந்ததால் பூஜாப்புரம் என்ற பெயர் வந்தது. விஜயதசமி நாளில், பறவை காவடி, சூர்யகாவடி, மயில்காவடி, அக்னிகாவடி போன்ற மிகப்பெரிய காவடி ஊர்வலங்களும் நடைபெறுகிறது.[1]

பூஜாப்புரம்
நகரம்
அடைபெயர்(கள்): "திருவனந்தபுரத்தின் ஆன்மா"
பூஜாப்புரம் is located in கேரளம்
பூஜாப்புரம்
பூஜாப்புரம்
கேரளாவில் பூஜாப்புரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°29′00″N 76°58′52″E / 8.4834100°N 76.981010°E / 8.4834100; 76.981010
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருவனந்தபுரம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
695012
தொலைபேசி இணைப்பு எண்0471
வாகனப் பதிவுகேஎல்-01
மக்களவைத் தொகுதிதிருவனந்தபுரம்

மத்திய சிறை

தொகு

பூஜாப்புரம் கேரள மத்திய சிறைச்சாலைக்காக அறியப்படுகிறது.[2] மத்திய சிறை மாநிலத்தின் மிகப் பழமையான ஒன்றாகும். இது திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக் காலத்தில் பிரித்தானியப் பொறியாளர்களால் கட்டப்பட்டது. மாநில கல்வி துறை (பரிக்சா பவன்), எச். எல். எல். லைஃப் கேர் தலைமை அலுவலகம் (முன்னர் ஹிந்துஸ்தான் லேடெக்ஸ் நிறுவனம்), திருவாங்கூர் ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம், பாரதீயம் அறக்கட்டளை ஆகியவையும் இங்கு அமைந்துள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  2. http://www.keralaprisons.gov.in/index.php?option=com_content&view=article&id=65&Itemid=72
  3. "Nelliyodu Vasudevan Namboodiri". Kathakali Artists. CyberKerala."Nelliyodu Vasudevan Namboodiri". Kathakali Artists. CyberKerala.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜாப்புரம்&oldid=4171941" இலிருந்து மீள்விக்கப்பட்டது