பூஜா குப்தா
பூஜா குப்தா ( Puja Gupta ) ஓர் இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். 2077இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளார்.
பூஜா குப்தா | |
---|---|
2013 இல் பூஜா குப்தா | |
பிறப்பு | புது தில்லி, இந்தியா |
பணி | நடிகர், வடிவழகி |
வாழ்க்கைத் துணை | வருண் தலுக்தர் (தி. 2019) |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | பெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2007 |
செயல் ஆண்டுகள் | 2007–தற்போது வரை |
முக்கிய போட்டி(கள்) | பெமினா மிஸ் இந்தியா 2007 (Winner) மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2007 (முதல் 10) |
வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஇந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். 2007 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றபோது இவரது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.[1][2][3] 2007 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் முதல் பத்து இடங்களைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து பல பொருட்களின் சந்தைப்படுத்தல் முகமாக ஆனார்.
2011இல் வெளியான பால்ட்டு ( F.A.L.T.U ) என்ற இந்தி மொழித் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்[4] 2013 இல், கோ கோவா கான் மற்றும் ஷார்ட்கட் ரோமியோ திரைப்படத்தில் தோன்றினார்.
குப்தா விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா வின் ஆதரவாளராகவும் இருக்கிறார்.[5]
சொந்த வாழ்க்கை
தொகுபூஜா முதலீட்டு வங்கியாளர் வருண் தலுக்தர் என்பவரை மணந்தார்.[6]
சான்றுகள்
தொகு- ↑ Sharma, Purnima (31 May 2007). "I feel like a winner: Puja Gupta". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
- ↑ "You have to be diplomatic to survive in Bollywood: Puja Gupta". The Times of India. 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
- ↑ "Puja Gupta does a hat trick with her bikini act". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 13 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
- ↑ "Jackky, Puja are just good friends?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 February 2011. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
- ↑ Puja Gupta Says, ‘Let Vegetarianism Grow on You’. petaindia.com
- ↑ "SEE PICS: Has Go Goa Gone actor Puja Gupta found love in Varun Talukdar?".