பூஜா தண்டா

இந்திய மல்யுத்த வீராங்கனை

பூஜா தண்டா (Pooja Dhanda) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார். 1994ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 அன்று அரியானா மாநிலத்தின் இசார் மாவட்டத்திலுள்ள குதானா கிரமாத்தில் இவர் பிறந்தார்.[3] 2010ஆம் ஆண்டு கோடைகால இளைஞர் ஒலிம்பிக் போட்டியிலும்,[4] 2018ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[5]

பூஜா தண்டா
Pooja Dhanda
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியாn
பிறப்பு1 சனவரி 1994 (1994-01-01) (அகவை 30)[1]
பூதான கிராமம், இசார் மாவட்டம், அரியானா, இந்தியா[2]
வசிப்பிடம்பூதான கிராமம்
உயரம்162 செ.மீ[1]
எடை57 கி.கி
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமல்யுத்தம்
நிகழ்வு(கள்)கட்டற்றமுறை மல்யுத்தம்
கல்லூரி அணிஉசார் அரசுக் கல்லூரி
பயிற்றுவித்ததுகுல்தீப்சிங்
25 ஆகத்து 2018 இற்றைப்படுத்தியது.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பூஜா அரியானா மாநிலத்தின் இசார் மாவட்டத்திலுள்ள பூதான கிராமத்தில் பிறந்தார்.[3] பூஜாவின் தந்தை இசாரில் உள்ள அரியானா கால்நடை பராமரிப்பு மையத்தில் இழுவை இயந்திர ஓட்டுநராவார். தொடக்கத்தில் பூஜா மகாபிர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு யூடோ விளையாட்டு விரராகவே பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் மல்யுத்த வீர்ராக மாறினார்.[3]

தொழில்முறை சாதனைகள்

தொகு
  1. ஓர் இளம் விளையாட்டுப் பெண்மணியாக இருந்த பூஜா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால இளைஞர் ஒலிம்பிக்கில் 60 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது பூஜாவின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலம் தொடங்கியது.[6]
  2. 2013 ஆம் ஆண்டில் பூஜா தேசிய சாம்பியன் பட்டப் போட்டியில் அறிமுகமான பிறகு, இறுதிப் போட்டியில் பபிதா போகாட்டை தோற்கடித்தார்,
  3. 2017 ஆம் ஆண்டில் நான்கு முக்கிய தொழில்முறை தேசிய சாம்பியன் பட்டப் போட்டிகளையும் வென்றார்.
  4. உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான எலன் மரௌலிசை பூஜா இரண்டு முறை தோற்கடித்துள்ளார்.
  5. உலக சாம்பியம் பட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்றவருமான நைசீரியாவைச் சேர்ந்த ஒதுநயோ அதிகுவோரயேவையும், உலக சாம்பியன் பட்டப் போட்டியின் வெள்ளிப் பதக்கம் வென்றவரான மார்வா அம்ரியையும் பூஜா தோற்கடித்துள்ளார்.[3]
  6. வெற்றிப்படமான டங்கல் திரைப்படத்தில் பபிதா போகாட் வேடத்தில் நடிக்க முதலில் பூஜாவே தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. இருப்பினும், பூஜா பின்னர் உ,ண்மை வாழ்க்கையில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பபிதா போகாட்டின் சகோதரி கீதா போகாட்டை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடித்தார்.[7]
  7. 2018 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் நைசீரியாவின் ஒதுநயோவிடம் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த காரணத்தால் பெண்கள் 57 கிலோ கட்டற்ற மல்யுத்தத்தில் பூஜாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்த்து.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Pooja, Dhanda (IND)". United World Wrestling. Archived from the original on 18 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 26 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Sharma, Chetan (13 February 2018). "Pooja Dhanda: Star in the making". இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 27 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180227181752/https://www.indiatoday.in/msn-mail-today/story/pooja-dhanda-star-in-the-making-1168801-2018-02-13. பார்த்த நாள்: 6 April 2018. 
  3. 3.0 3.1 3.2 3.3 Once a judoka, Pooja Dhanda wants to win laurels in wrestling பரணிடப்பட்டது 2018-06-16 at the வந்தவழி இயந்திரம், Times of India, 25 Feb 2018.
  4. "Wrestling – Women's Freestyle 60 kg – Competition Sheet (With Results)" (PDF). Singapore Youth Olympic Games Organising Committee. 16 ஆகத்து 2010. Archived from the original (PDF) on 25 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2010.
  5. "Proud feeling of receiving Arjun Award: Pooja Dhanda". 28 August 2019. https://www.aninews.in/news/sports/others/proud-feeling-of-receiving-arjuna-award-says-pooja-dhanda20190828152846/. பார்த்த நாள்: 28 August 2019. 
  6. "Commonwealth Games 2018: Pooja Dhanda aims for gold in debut after recovering from career-threatening injury - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-25.
  7. "Pooja defeats real-life 'Dangal' girl Geeta - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/wrestling/pooja-defeats-real-life-dangal-girl-geeta/articleshow/62313686.cms. 
  8. CWG 2018: Pooja Dhanda wins silver, Divya Kakran bags bronze as India's medal rush in wrestling continue, Times Now News, 13 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_தண்டா&oldid=3791866" இலிருந்து மீள்விக்கப்பட்டது