வெள்ளைப்பூண்டு
வெள்ளைப் பூண்டு | |
---|---|
Allium sativum, known as garlic, from William Woodville, Medical Botany, 1793. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Asparagales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. cepa
|
இருசொற் பெயரீடு | |
Allium cepa லி. |
பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.
கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.
வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.[சான்று தேவை] பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். சித்த மருத்துவத்தில் இலசுனம் என அழைக்கப்படுகிறது. மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துக் கொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
பிறப்பிடம்
தொகுபூண்டின் தாயகம் மத்திய ஆசியக்கண்டமாகும். பிறகு இது இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்குப் பரவியது.
குணங்கள்
தொகுஎரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது.
விவசாயம்
தொகுபூண்டை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள்.
உற்பத்தி போக்குகள்
தொகுசீனாவில் பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யபடுகிறது.
உலகின் முதல் 10 பூண்டு உற்பத்தியாளர்கள் — 11 சூன் 2008 | ||||
---|---|---|---|---|
நாடு | உற்பத்தியளவு (டன்களில்) | குறிப்பு | ||
சீனா | 12,088,000 | F | ||
இந்தியா | 645,000 | F | ||
தென் கொரியா | 325,000 | F | ||
எகிப்து | 258,608 | F | ||
உருசியா | 254,000 | F | ||
ஐக்கிய அமெரிக்கா | 221,810 | |||
எசுப்பானியா | 142,400 | |||
அர்கெந்தீனா | 140,000 | F | ||
மியான்மர் | 128,000 | F | ||
உக்ரைன் | 125,000 | F | ||
World | 15,686,310 | A | ||
No symbol = அதிகாரபூர்வ எண்ணிக்கை, P = official figure, F = FAO estimate, *= unofficial/semiofficial/mirror data, C = calculated figure, A = aggregate (may include official, semiofficial, or estimates). |
மருத்துவப் பயன்கள்
தொகுநோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத் திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.[1]