பூதநீலகண்டர் கோயில்

பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple); (நேபாளி: बुढानिलकण्ठ मन्दिर (மொழிபெயர்ப்பு: (தொன்மையான நீலநிறத் தொண்டை), நேபாளத்தின் மாநில எண் 3ல், காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் எனுமூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

பூதநீலகண்டர் கோயில்
ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நீலகண்டர் கோயில்
பூதநீலகண்டர் கோயில் is located in நேபாளம்
பூதநீலகண்டர் கோயில்
நேபாளம்-இல் உள்ள இடம்
பெயர்
பெயர்:बुढानिलकण्ठ मन्दिर
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாநிலம்:மாநில எண் 3
மாவட்டம்:காத்மாண்டு
அமைவு:பூதநீலகண்டம்
ஆள்கூறுகள்:27°46′41″N 85°21′44″E / 27.7781°N 85.3622°E / 27.7781; 85.3622
கோயில் தகவல்கள்

திறந்தவெளியில் நிறுவப்பட்ட இக்கோயிலின் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தில் மையத்தில், ஆதிசேஷன் மீது யோக நித்திரை கொண்டுள்ளார். பூதநீலகண்டர் கோயில், காத்மாண்டு சமவெளியின் வடக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் உள்ளது.[1] பூதநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச்சிலையே நேபாளத்தின் பெரிய இந்து சமய சிற்பம் ஆகும்.[2]

மூலவர் தொகு

கோயில் மூலவரான பூதாநீலகண்டரின் கிடந்த நிலையில் அமைந்த உருவச் சிலை ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட பூதாநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே, ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார்.[3]

 

மேற்கோள்கள் தொகு

  1. "Ministry of Culture, Tourism and Civil Aviation - Government of Nepal". www.tourism.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
  2. "Budhanilkantha, Nepal - Lonely Planet". lonelyplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.
  3. "Buddha Nilakantha Temple Nepal ~ Blog on vishnu temples". divyadesamyatra.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-14.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Budhanilkantha Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதநீலகண்டர்_கோயில்&oldid=3509612" இலிருந்து மீள்விக்கப்பட்டது