பூநகரிக் கோட்டை
பூநகரிக் கோட்டை இலங்கையில், வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பவரின் கருத்தாகும்
பூநகரிக் கோட்டை Pooneryn fort | |
---|---|
பகுதி: கிளிநொச்சி | |
பூநகரி, இலங்கை | |
ஆள்கூறுகள் | 9°30′12″N 80°12′44″E / 9.503370°N 80.212141°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | மோசமாக சேதமடைந்துள்ளது |
இட வரலாறு | |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல், பாறை |
தோற்றம்
தொகு1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் 1658 ஆம் ஆண்டுவரை ஆண்டனர். தமது ஆட்சியின் கடைசிக் காலத்தை அண்டி இக் கோட்டையை அவர்கள் நிறுவினர். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை நீரேரிக்குத் தெற்கே முடிவடையும் இடத்தில் இக் கோட்டை அமைக்கப்பட்டது. சட்டவிரோதமாக வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே நடைபெற்றுவந்த கடத்தலைத் தடுப்பதற்கும், குற்றவாளிகள் வன்னிக்குத் தப்பிச் செல்வதைக் கட்டுப்படுத்துவதுமே இக் கோட்டையின் முக்கியமான பணியாக இருந்திருக்கலாம்.[1] 1658 ஆம் ஆண்டில் இக் கோட்டையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர், இங்கே பெருமளவில் திருத்தவேலைகள் எதையும் செய்யவில்லை.
அமைப்பு
தொகுஇக் கோட்டையின் தள அமைப்பு ஏறத்தாழச் சதுர வடிவானது. ஆனையிறவுக் கோட்டையைவிடச் சற்றுப் பெரிதான இதன் பக்கங்கள் 100 அடி நீளம் கொண்டவை. இக் கோட்டையின் கிழக்கு மூலையிலும், மேற்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் இருந்தன. கோட்டையின் வடக்குப் பக்கச் சுவரில் அதன் வாயில் இருந்தது. இவ் வாயிலுக்கு அருகே உட்புறத்தில் காவலர் அறையும், தெற்குச் சுவரையும், மேற்குச் சுவரையும் ஒட்டியபடி வரிசையாக அமைந்த போர்வீரர் தங்கும் அறைகள் இருந்தன. கிழக்குப் புறச் சுவரை அண்டிப் பல அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடமும் அமைக்கப்பட்டிருந்தது.[1]
மாற்றங்கள்
தொகுபிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் இக் கோட்டை ஒரு ஓய்வுவிடுதியாகப் பயன்பட்டு வந்தது. பிற்காலத்தில் இது கைவிடப்பட்டது.[1]
தற்போதைய நிலை
தொகு1980களுக்குப் பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் இக் கோட்டையும் பெரும் சேதங்களுக்கு உள்ளானது. 2004 ஆம் ஆண்டளவில் இதன் சில பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன.[2]
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).
- Paranavitana, K. D., Pooneryn's Past, Sunday Times, 23 November 2008.