பூனம் தேவி யாதவ்

இந்திய அரசியல்வாதி

பூனம் தேவி யாதவ் (Poonam Devi Yadav) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு ககாரியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2005ஆம் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பூனம் தேவி 2010, 2015 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று 2020 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். இவரது கணவர் ரன்வீர் யாதவும் ககாரியா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1990 முதல் 1995 வரை பணியாற்றினார்.[3]

பூனம் தேவி யாதவ்
பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2005–2020
முன்னையவர்யோகேந்திர சிங்
பின்னவர்சத்திராபதி யாதவ்
தொகுதிககாரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1975 (1975-07-05) (அகவை 49)[1]
இராம்பூர் அலலுலி, ககாரியா, இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்(s)பாட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிஇளங்கலைச் சட்டம்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "member profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Bihar Legislative Assembly". election in india. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  3. "Bihar's biwi brigade". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_தேவி_யாதவ்&oldid=3984749" இலிருந்து மீள்விக்கப்பட்டது