பூபிசு போட்டே
பூபிசு போட்டே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மான்டெல்லிடே
|
பேரினம்: | பூபிசு
|
இனம்: | பூ. போட்டே
|
இருசொற் பெயரீடு | |
பூபிசு போட்டே Vences & Glaw, 2002 |
பூபிசு போட்டே என்பது மான்டெலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.
பரவலும் வாழிடமும்
தொகுபூ. போட்டே சிற்றினம் மடகாசுகரின் கிழக்கு மழைக்காடுகளில் 800-1,000 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றது. இது வனத்தில் காணப்படும் நீரோடைகளில் வாழ்கின்றது. இந்நீரோடைகளில் இது இனப்பெருக்கம் செய்வதாகக் கருதப்படுகிறது. மழைக்காடுகளின் விளிம்புகளில் காணப்படும் இந்தச் சிற்றினம் காடுகளுக்கு வெளியே ஒருபோதும் காணப்பட்டதில்லை.[1]
பாதுகாப்பு
தொகுபூ. போட்டே மடகாசுகரில் அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்படுத்தியுள்ளது. இருப்பினும், விவசாயம், மரம் வெட்டுதல், கரியிடல், ஆக்கிரமிப்பு இனங்கள் மூலம் தொடர்ந்து வாழ்விட அழிவு காரணமாக இதன் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்கள் சைட்ரைடையோமைகோசிசு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இருப்பினும் இது தற்போது மடகாசுகரில் உள்ள நீர்நில வாழ் உயிரினங்களைப் பாதிக்கவில்லை.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2016). "Boophis bottae". IUCN Red List of Threatened Species 2016: e.T57394A84161971. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T57394A84161971.en. https://www.iucnredlist.org/species/57394/84161971. பார்த்த நாள்: 16 November 2021.