புவியின் வளிமண்டலம்

(பூமியின் வளிமண்டலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.

வளிமண்டலப் படலங்கள் (NOAA)

வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஓர் எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.

ஆக்கும் கூறுகள்

தொகு

புவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன.

கனவளவிற்கேற்ப வளியின் கூறுகள்
ppmv: parts per million by volume (note: volume fraction is equal to mole fraction for ideal gas only, see volume (thermodynamics))
வாயு கனவளவு
நைட்ரஜன் (N2) 780,840 ppmv (78.084%)
ஆக்சிஜன் (O2) 209,460 ppmv (20.946%)
ஆர்கன் (Ar) 9,340 ppmv (0.9340%)
கார்பன் டையாக்சைடு (CO2) 394.45 ppmv (0.039445%)
நியோன் (Ne) 18.18 ppmv (0.001818%)
ஹீலியம் (He) 5.24 ppmv (0.000524%)
மீதேன் (CH4) 1.79 ppmv (0.000179%)
கிரிப்டன் (Kr) 1.14 ppmv (0.000114%)
நீரியம் (H2) 0.55 ppmv (0.000055%)
நைட்ரஸ் ஆக்சைடு (N2O) 0.325 ppmv (0.0000325%)
கார்பன் மோனாக்சைடு (CO) 0.1 ppmv (0.00001%)
செனன் (Xe) 0.09 ppmv (9×10−6%) (0.000009%)
ஓசோன் (O3) 0.0 to 0.07 ppmv (0 to 7×10−6%)
நைட்ரஜன் டையாக்சைடு (NO2) 0.02 ppmv (2×10−6%) (0.000002%)
அயோடின் (I2) 0.01 ppmv (1×10−6%) (0.000001%)
அமோனியா (NH3) trace
மேற்கூறிய காய்ந்த வளிமண்டலத்தில் சேர்க்கப்படாதது:
நீராவி (H2O) ~0.40% over full atmosphere, typically 1%-4% at surface

வளிமண்டலப் படைகள்

தொகு

புவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

அடிவளிமண்டலம் (Troposphere)
படைமண்டலம் (Stratosphere)
இடை மண்டலம் (mesosphere)
வெப்ப வளிமண்டலம் (thermosphere)
புறவளி மண்டலம் (exosphere)

அடிவளிமண்டலம்

தொகு

அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.

படைமண்டலம்

தொகு

படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது

இடை மண்டலம்

தொகு

இடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.

வெப்ப வளிமண்டலம்

தொகு

வெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.

புறவளி மண்டலம்

தொகு

புறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.

வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும்

தொகு

வளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது:

  • அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்
  • படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும்.
  • இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது.
  • வெப்ப வளிமண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும்

செய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும்.

மேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன.

பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14 °C ஆகும்.

அழுத்தம்

தொகு
முதன்மைக் கட்டுரை: வளிமண்டல அழுத்தம்

வளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும்.

ஆய்வுகள்

தொகு

வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.[1]

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Carbon Dioxide at NOAA’S Mauna Loa Observatory reaches new milestone: tops 400 ppm. பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம், என்.ஓ.ஏ.ஏ செய்தி அறிக்கை, மே 10, 2013

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியின்_வளிமண்டலம்&oldid=3429313" இலிருந்து மீள்விக்கப்பட்டது