பூரண போளி
பூரண போளி (Puran poli) என்பது ஒரு இந்திய இனிப்பு வகைகளுள் ஒன்றாகும். இது ரொட்டி போன்ற வடிவத்தில் இருக்கும்.
மாற்றுப் பெயர்கள் | வேத்மி, ஹோலிஜ், ஒப்பட்டு, போளி, பூரணச்சி போளி, காட் போளி, பப்பு பக்ஷலு, பக்ஷலு, பொப்பட்டு, ஒலிகா |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | மகாராட்டிரம், குசராத்து, கோவா (மாநிலம்), கருநாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், தெலங்காணா மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதி |
பரிமாறப்படும் வெப்பநிலை | Hot |
முக்கிய சேர்பொருட்கள் | மைதா, சர்க்கரை, கடலைப்பருப்பு |
பெயர்கள்
தொகுஇந்த இனிப்பு வகை ரொட்டிக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வெறு பெயர்கள் உள்ளன. குஜராத்தில், பூரண் போளி அல்லது வேத்மி எனவும், மராத்தியில், பூரன் போலி எனவும், மலையாளம் மற்றும் தமிழில் போளி எனவும், பக்ஷம் அல்லது பொப்பட்டு அல்லது ஒலிகா எனத் தெலுங்கிலும், தெலுங்கானாவில் போலெ எனவும், ஹொளிகெ அல்லது ஒப்பட்டு என கன்னடத்திலும், உப்பட்டி அல்லது சாதாரணமாக போளி என கொங்கணியிலும் அழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுஇதன் செய்முறை, பக்ஷம் என்கிற தலைப்பில், 14ஆம் நூற்றாண்டு தெலுங்கு கலைக்களஞ்சியமான "மனுசரித்திரா"வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூலைத் தொகுத்தவர் தற்போதுள்ளஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அல்லசானி பெத்தன்னா ஆவார்.[1]
தேவையான பொருட்கள்
தொகுபூரண போளி, கடலைப் பருப்பு, மைதா மாவு அல்லது கோதுமை மாவு, வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை , ஏலக்காய் தூள் மற்றும் / அல்லது ஜாதிக்காய் தூள், நெய் மற்றும் நீர் ஆகியவற்றை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. சில சமயங்களில் குஜராத்தில் துவரம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் ப்பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரா மற்றும் பிற இடங்களில், பாசிப் பயறு அல்லது பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை அல்லது இரண்டும் சேர்ந்த கலவையில் தயாரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுகிறது. இதைச் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய அல்லது பயன்படுத்த முடியாத பிற பொருட்களாக கருதப்படுவது கொட்டைகள், பேரீச்சம்பழங்கள், மற்றும் மஞ்சள் தூள் போன்றவை ஆகும்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ K.T. Achaya (2003). The Story of Our Food. Universities Press. p. 85. ISBN 978-81-7371-293-7.
- ↑ புரான் பாலி
- ↑ புரான் பொலி ரெசிபி - ஒரு பொதுவான மஹாராஷ்ட்ரி இனிப்பு