பூலோக ரம்பை (1940 திரைப்படம்)

பூலோக ரம்பை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவின் இயக்கத்தில், எம். டி. விஸ்வநாதன், எம். சோமசுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பூலோக ரம்பை
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புஎம். டி. விஸ்வநாதன்
விஜய மாருதி பிக்சர்ஸ்
சேலம் சண்முகா பிலிம்ஸ்
எம். சோமசுந்தரம்
வசனம்பி. எஸ். இராமையா
நடிப்புதி. க. சண்முகம்
டி. ஆர். மகாலிங்கம்
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். பாலையா
கே. எல். வி. வசந்தா
டி. ஏ. மதுரம்
குமாரி ருக்மணி
டி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்யானை வைத்தியநாதையர்
ஒளிப்பதிவுபோமன் டி. இராநி
வெளியீடுதிசம்பர் 14, 1940
நீளம்16,000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை தொகு

காம்போஜ் நாட்டு இளவரசன் புவனேந்திரனும் (தி. க. சண்முகம்), அவனது நண்பனும் மந்திரி மகனுமான புத்திசிகாமணியும் (டி. ஆர். மகாலிங்கம்) தேச யாத்திரை செய்யக் கிலம்புகிறார்கள். இருவரும் குலதெய்வமான காளி கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனர். காளிதேவி இளவரசனுக்கு மந்திர வாளும், மந்திரிகுமாரன் வேண்டும் போது ஒரு வரமும் அளித்து ஆசீர்வதிக்கிறாள்.[2]

விரிஞ்சைநகர் இளவரசி பூலோகரம்பை (கே. எல். வி. வசந்தா) தன் தோழிகளுடன் நாகபூசை செய்வதற்காக பூங்காவிற்கு வருகிறாள். அப்போது அங்கு வந்த நாகாசுரன் (டி. பாலசுப்பிரமணியம்) அவளைத் தூக்கிச் சென்று தன் பாதாள அரண்மனைத் தூக்கிச் செல்கிறான். ரம்பை அங்கிருந்து ஒரு பூசை அறைக்குச் சென்று அவனிடமிருந்து தப்புகிறாள்.[2]

புவனேந்திரனும், புத்திசிகாமணியும் பாதாள அரண்மனைக்குச் செல்லும் இரகசியக் குளக்கரைக்குத் தற்செயலாக வருகிறார்கள். புவனேந்திரன் தனக்கு உணவு தேடித் தரும்படி சிகாமணியை அனுப்பி விட்டு குளக்கரையில் இளைப்பாறுகிறான். அப்போது அங்கு வந்த நாகாசுரன் புபனேந்திரனை சண்டைக்கிழுத்து, அவனது மந்திர வாலால் மடிகிறான். நாகாசுரனின் மோதிரத்தின் சக்தியால் புவனேந்திரனுக்கு குளத்து நீர் வழி விடுகிறது. புவனேந்திரனும் பாதாள அரண்மனைக்குள் சென்று பூலோக ரம்பையை சந்தித்து அவளைக் காந்தர்வ மணம் புரிகிறான்.[2]

இதற்கிடையில், உணவு பெற்றுவரக் கிளம்பிய புத்திசிகாமணியுடன் அந்நகரச் சிப்பாய்கள் சண்டையிட்டுக் காயப்படுத்துகிறார்கள். அவனை சகுலனும் (டி. எஸ். துரைராஜ்) அவனது சகோதரி அலங்காரமும் (பாபுஜி) காப்பாற்றி நகரின் வெளிப்புறத்தில் மல்லிகாவின் (குமாரி ருக்மணி) வீட்டிற்குக் கொண்டு போகிறார்கள். அங்கு அவனுக்கு மல்லிகா சிகிச்சை அளிக்கிறாள். மறுநாள் குளக்கரைக்கு வந்தபோது புவனேந்திரனைக் காணவில்லை. பாதாள அரண்மனையில் பூலோக ரம்பையுடன் சல்லாபித்திருந்த புவனேந்திரன் அவளுடன் சதுரங்கம் ஆடும்போது , மந்திரியின் நினைவு வந்து, அவளுடன் பூலோகம் வருகிறான். அப்போது வேட்டையாட வந்த விஜயநகர மன்னன் விஜயதரனும் (டி. எஸ். பாலையா) அவனது மந்திரி துர்முகனும் (எம். ஆர். சுவாமிநாதன்) பூலோக ரம்பையைப் பார்த்து, அவளை அடைய நினைக்கிறான். துர்முகன் வெங்கம்மாள் என்பவளை அனுப்புகிறான். அவள் மேல் இரக்கம் கொண்ட புவனேந்திரன் அவளை பாதாள அரண்மனைக்கு சமையல்காரி ஆக்குகிறான். அவள் ஒருநாள் புவனேந்திரனுக்கு நஞ்சும், ரம்பைக்கு மயக்கமருந்தும் கொடுத்து, அவனது மந்திர மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு ரம்பைஅயி தூக்கிக் கொண்டு போய் விஜயதரனிடம் சேர்ப்பிக்கிறாள்.[2] (இன்னும் வரும்'')

நடிகர்கள் தொகு

நடிகர் பாத்திரம்
தி. க. சண்முகம் புவனேந்திரன்
டி. ஆர். மகாலிங்கம் புத்திசிகாமணி
டி. எஸ். பாலையா விஜயதரன்
டி. பாலசுப்பிரமணியம் நாகாசுரன்
என். எஸ். கிருஷ்ணன் கிங்கிணி பண்டாரம்
பி. ஜி. வெங்கடேசன் சாது சச்சிதானந்தர்
கோவை கிருஷ்ண சாஸ்திரி முதலமைச்சர்
எம். ஆர். சுவாமிநாதன் துர்முகன்
டி. எஸ். துரைராஜ் சகுலன்
பி. ஜி. குப்புசாமி சோணாசலம்
பி. ஏ. சுப்பையா பிள்ளை சொக்கப் பண்டாரம்
ராமசாமி ஐயர் சிப்பாய்
கிட்டன் சோமுப் பண்டாரம்

நடிகைகள் தொகு

நடிகர் பாத்திரம்
கே. எல். வி. வசந்தா பூலோக ரம்பை
குமாரி ருக்மணி மல்லிகா
டி. ஏ. மதுரம் மதுரவல்லி
பொன்னம்மாள் வெங்கம்மாள்
பாபுஜி அலங்காரம்
ஜானகி அம்மாள் மகாராணி

இவர்களுடன் சின்னச்சாமி, ஏழுமலை, எம். இராமநாதன், கே. சீதாராமன், சகுந்தலா, சரோஜா முதலியானோரும் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள் தொகு

பூலோக ரம்பை திரைப்படத்தில் 13 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2] இவற்றை யானை வைத்தியநாதையர் இயற்றியிருந்தார்.[1]

பாடல் பாடியவர்(கள்) இராகம் தாளம்
இதானே சக்தி மாய லீலையே பி. ஜி. வெங்கடேசன் இந்துத்தானி மெட்டு
நாகபஞ்சமி திருநாள் இதுவே கே. எல். வி. வசந்தா புன்னாகவராளி மிசுரம்
நீயே துணை செய்குவாய் டி. கே. சண்முகம், டி. ஆர். மகாலிங்கம் சகானா ஆதி
தாயறியாச் சூலுண்டோ எங்கும் கே. எல். வி. வசந்தா இந்துத்தானி மெட்டு
எனதாருயிரே இனி கே. எல். வி. வசந்தா, டி. கே. சண்முகம் இந்துத்தானி மெட்டு
எங்கே என்று தேடுவேன் டி. ஆர். மகாலிங்கம் இந்துத்தானி மோகனம்
வாழ்வு தாழ்வு நிலையோ பி. ஜி. வெங்கடேசன் கலிங்கடா
ஜெய ஜகத் ஜனனீ கௌரீ கே. எல். வி. வசந்தா ஆரபி
ஜகபதியின் பாலா துயிலாய் கே. எல். வி. வசந்தா இந்துத்தான் தும்ரி
தகுமோ தகுமோ தாயே டி. ஆர். மகாலிங்கம் கானடா
ஆங்காரி திரிசூலி அன்பர்க்கு அனுகூலி பி. ஜி. குப்புசாமி நாட்டுப்பாடல் மெட்டு
ராணீ, நானும் நீயுமே கூடியே வாழ்ந்தால் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் இந்துத்தானி குறிப்பு
ஆசையேனோ ஆசையேனோ அந்த நாளே என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் இந்துத்தானி மெட்டு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "திருப்புமுனைத் திரைப்படங்கள் - 12: பூலோக ரம்பை - 1940". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 பூலோக ரம்பை பாட்டுப் புத்தகம். இலங்கை: கலைமகள் கம்பனி, 103 செட்டித் தெரு, கொழும்பு. 1940.