பெண்களின் தங்குமிடம்

வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கான புகலிடம்

பெண்கள் தங்குமிடம் (women's shelter) பாதிக்கப்பட்ட பெண்களின் புகலிடம் என்றும் அழைக்கப்படும் இது அனைத்து வகையான குடும்ப வன்முறைகளிலிருந்தும் நெருங்கிய கூட்டாளர் வன்முறைகளிலிருந்தும் தப்பிக்கும் பெண்களுக்கு தற்காலிக பாதுகாப்பும் ஆதரவும் அளிக்கும் ஒரு இடமாகும்.[1] ஆபத்திலுள்ள இரு பாலின மக்களுக்கும் திறந்திருக்கும் அதே நோக்கத்திற்காக ஒரு இடத்தை விவரிக்கவும் இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பிரிங்கிள்-பேட்ரிக் மாளிகை 1877இல் கட்டப்பட்டது. 1990இல் ஒரு தங்குமிடமாக மாற்றப்பட்டது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் செய்யப்பட்ட தரவுகள் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் உடல் ரீதியான வன்முறையை அனுபவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.[2] பத்தில் ஒருவர் பாலியல் வன்முறையை அனுபவிக்கிறார். [2] இவ்வாறான பெண்கள் தங்குமிடங்கள், தனிநபர்கள் மூலமும், குடும்ப வன்முறை மூலமும், நெருக்கமான பங்குதாரர் மூலமும் ஏற்படும் வன்முறைகளிலிருந்து தப்பிக்க உதவுகின்றன. மேலும் அவர்கள் எவ்வாறு அடுத்த நிலைக்குச் செல்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் போது பாதுகாப்புக்கான இடமாக கருதுகிறார்கள். கூடுதலாக, பல தங்குமிடங்கள் பெண்களுக்கு உதவவும் அவர்களின் குழந்தைகள் ஆலோசனை மற்றும் சட்ட வழிகாட்டுதல் உட்பட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. [3]

குடும்ப வன்முறை அல்லது நெருக்கமான கூட்டாளரின் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு தப்பிக்கும் திறன் மதிப்புமிக்கது. கூடுதலாக, இதுபோன்ற சூழ்நிலைகள் அடிக்கடி அதிகாரத்தின் ஏற்றத்தாழ்வை உள்ளடக்குகிறது. இது பாதிக்கப்பட்டவரின் நிதி சார்ந்த விருப்பங்களை அவர்கள் வெளியேற விரும்பும் போது கட்டுப்படுத்துகிறது.[4] இவ்வாறான பெண்கள் தங்குமிடங்கள் பெண்களுக்கு உறுதியான வளங்களைப் பெற உதவுகின்றன. மேலும், அவர்களின் குடும்பங்கள் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க உதவுகின்றன. [5] கடைசியாக, வன்முறையால் தாக்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடங்கள் மதிப்புமிக்கவை. ஏனெனில் அவை அதிகாரமளிக்கும் உணர்வைக் கண்டறிய உதவுகிறது. [5]

நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இவ்வாறான பெண்கள் தங்குமிடங்கள் உள்ளன.[6] அவர்கள் அரசாங்க ஆதாரங்களைக் கொண்டும், இலாப நோக்கற்ற நிதிகளுடன் ஆதரிக்கப்படுகிறார்கள். கூடுதலாக, பல கொடையாளிகளும் இந்த நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள். மேலும், ஆதரிக்கிறார்கள்.

வரலாறு தொகு

ஆசியா தொகு

வன்முறை செய்யப்பட்ட பெண்களுக்கு தங்குமிடம் வழங்குவது ஆசியாவில் புதிய கருத்து அல்ல. நிலப்பிரபுத்துவ யப்பானில், காகெக்கோமி தேரா என அழைக்கப்படும் பௌத்தக் கோவில்கள், விவாகரத்து செய்வதற்கு முன் தாக்கப்பட்ட பெண்கள் தங்குமிடங்களாக செயல்பட்டன.[7] இருப்பினும், 1993 வரை யப்பானின் அடிமட்ட பெண்கள் இயக்கம் முதல் தங்குமிடம் கட்டும் வரை ஒரு முறையான அமைப்பு நிறுவப்படவில்லை.[8] இன்று, நாடு முழுவதும் இவ்வாறான முப்பது முகாம்கள் உள்ளன. [8] இதேபோன்ற வரலாறு சீனாவில் அவ்வளவு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. அங்கு 1990கள் வரை பெண்கள் தங்குமிடங்கள் இல்லை. அதன் பின்னர் சீனா ஒரு சிறிய எண்ணிக்கையில் மட்டுமே தங்குமிடங்களைத் திறந்தது.[9] பெய்ஜிங்கில் இருபது மில்லியன் மக்களுக்கு தங்குமிடம் இல்லை. [10]

அமெரிக்கா தொகு

நவீன உலகின் முதல் பெண்கள் தங்குமிடம் அமெரிக்காவின் "சொர்க்க வீடு" (Haven House) ஆகும். இது 1964இல் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.[11] [12]

அமெரிக்காவில் ஆரம்பகால பெண்கள் தங்குமிடம், கலிபோர்னியாவின் ஹேவர்டில் 1972இல் ஒன்றாக தேவாலயத்தில் கலந்து கொண்ட உள்ளூர் பெண்கள் குழுவால் நிறுவப்பட்டது. நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான பெட்டி மூஸ், மார்ச் 1972 இல் தங்குமிடத்தை அதிகாரப்பூர்வமாக இணைத்தார். தங்குமிடம் அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கு முன்பு தன்னார்வலர்கள் தங்கள் சொந்த வீடுகளில் பெண்களை தங்கவைத்தனர். [13] [3] 1974ஆம் ஆண்டில் மாசாச்சுசெட்சின் பாஸ்டனிலும், அட்லான்டாவிலும் பெண்களின் தங்குமிடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. [14]

மேற்கோள்கள் தொகு

  1. "women's refuge Definition in the Cambridge English Dictionary". dictionary.cambridge.org. பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
  2. 2.0 2.1 Breiding MJ, Chen J, Black MC. Intimate Partner Violence in the United States – 2010. Atlanta, GA: National Center for Injury Prevention and Control, Centers for Disease Control and Prevention; 2014.
  3. 3.0 3.1 Chanmugam, A. (2011). Perspectives on US Domestic Violence Emergency Shelters: What do Young Adolescent Residents and their Mothers Say?. Child Care In Practice, 17(4), 395. doi:10.1080/13575279.2011.596814
  4. McNulty, M., Crowe, T., Kroening, C., VanLeit, B., & Good, R. (2009). Time use of women with children living in an emergency homeless shelter for survivors of domestic violence. OTJR: Occupation, Participation & Health, 29(4), 183 8p.
  5. 5.0 5.1 Perez, S., Johnson, D. M., & Wright, C. V. (2012). The Attenuating Effect of Empowerment on IPV-Related PTSD Symptoms in Battered Women Living in Domestic Violence Shelters. Violence Against Women, 18(1), 102–117 16p. doi:10.1177/1077801212437348
  6. "Global Data Count" (PDF). The Global Network of Women's Shelters. Archived from the original (PDF) on 20 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Cassegård, C. (2013). Youth Movements, Trauma and Alternative Space in Contemporary Japan. Leiden: Brill, 78.
  8. 8.0 8.1 Yoshihama, M. (2002). Breaking the web of abuse and silence: voices of battered women in Japan. Social Work, 47(4), 389–400 12p. doi:sw/47.4.389
  9. Kaufman, Joan (2012-07-01). "The Global Women's Movement and Chinese Women's Rights". Journal of Contemporary China 21 (76): 585–602. doi:10.1080/10670564.2012.666830. பன்னாட்டுத் தர தொடர் எண்:1067-0564. 
  10. "Battered women in China could finally get a measure of legal protection". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
  11. "jfsla.org". Jewish Family Service of Los Angeles. May 29, 2012. Archived from the original on மார்ச் 25, 2012. பார்க்கப்பட்ட நாள் June 5, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Levinson, David (March 18, 2002). Encyclopedia of crime and punishment – Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761922582. பார்க்கப்பட்ட நாள் June 29, 2011.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  14. Detweiler, Elsie Moses Huck (December 2005). A Life of Faith: My Journey. iUniverse. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-37582-0.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்களின்_தங்குமிடம்&oldid=3946393" இலிருந்து மீள்விக்கப்பட்டது