பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் தசாப்தம்

1976 முதல் 1985 வரையிலான காலம்

பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் தசாப்தம் ( United Nations Decade for Women ) என்பது 1975 முதல் 1985 வரையிலான காலகட்டம் ஆகும். இது பெண்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது, அதாவது ஊதிய சமத்துவம், பாலின வன்முறை, நிலம் வைத்திருப்பது மற்றும் பிற மனித உரிமைகள் போன்றவை . இது டிசம்பர் 15, 1975 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் 31/136 மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [1]

இந்த தசாப்தம் முறைப்படி மெக்சிக்கோ நகரில் "விழிப்புணர்வு அதிகரிப்பதற்காக" மூன்று சர்வதேச கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை உள்ளடக்கியது. "வலையமைப்புகுகளை" உருவாக்குவதற்காகவும், "உலகம் முழுவதும் உள்ள பெண்களின் ஒற்றுமைக்காகவும்" கோபனாவன், நைரோபி உட்பட பல ஐ.நா நிறுவனங்களின் பல பிராந்திய சந்திப்புகளுடன் ( ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், உலக சுகாதார அமைப்பு, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம், ஐரோப்பிய பொருளாதார சமூகம் ) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ( இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம், உலக தேவாலயங்கள் அமைப்பு, பெண்கள் தேசிய சங்கம் ) ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தியது [2]

வரலாறு தொகு

1975 ஆம் ஆண்டு மெக்சிக்கோ நகரில் முதல் ஐநா மகளிர் மாநாடு நடைபெற்றது. குறிப்பாக லெட்டிடியா ஷஹானி மற்றும் ஊ தாண்ட் ஆகியோரின் முயற்சியால் 1976 ஆம் ஆண்டு ஐ.நா பெண்களுக்கான தசாப்தம் தொடங்கும் என்று அங்கு அறிவிக்கப்பட்டது. [1] ஐ.நா.வின் உறுப்பினர்கள், பெண்களுக்கான கல்வியறிவு, தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். சுகாதாரக் கல்வி மற்றும் சேவைகள், குடும்பக் கட்டுப்பாடு கல்வி மற்றும் பெண்களுக்கான நலன்புரி சேவைகளை மேம்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டனர். [3]

உரைகள் தொகு

பெண்களின் சமத்துவம் மற்றும் மேம்பாடு மற்றும் அமைதிக்கான அவர்களின் பங்களிப்பு குறித்த மெக்சிக்கோ பிரகடனம் என்ற தலைப்பில் முறையாகத் தலைப்பிடப்பட்ட மாநாட்டின் பிரகடனம், அனைத்து சமூகப் பொருளாதார நிலைகளிலும் உள்ள பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும் குடியேற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் வெளிப்பாடு மீது குறிப்பிட்ட கவனம் இருந்தது. இது ஒரு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கை நிறுவுவதற்கு அழைப்பு விடுத்தது. பிரகடனம் 30 கொள்கைகளை உருவாக்கியது. இது குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளுக்கு அழைப்பு விடுத்தது. இவற்றில் பல குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கை, பெண்களின் கல்வி மற்றும் தகவல் தொடர்பு, பொருளாதார சுதந்திரம், அரசியல் ஈடுபாட்டிற்கான உரிமைகள், திருமணத்தில் தேர்வு, பாலியல் தன்னாட்சி மற்றும் தாக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை மற்றும் பலவற்றில் கவனம் செலுத்துகின்றன. சீயோனிசத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளைச் சேர்த்தது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.[3]

1975 டிசம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செயல் திட்டம் மற்றும் பிரகடனத்திற்கு உறுதியளித்தது. இதன் மூலம், அவர்கள் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி (UNIFEM) மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஐ.நா. சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை நிறுவினர்.

1979 ஆம் ஆண்டில், ஐநா பொதுச் சபை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான மாநாட்டை ஏற்றுக்கொண்டது. [3]

இதனையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Encyclopedia of Gender and Society. SAGE Publications.
  2. Zinsser, Judith P. (November 1990). "The United Nations Decade for Women: A Quiet Revolution". The History Teacher 24 (1): 19–29. doi:10.2307/494202. https://archive.org/details/sim_history-teacher_1990-11_24_1/page/19. 
  3. 3.0 3.1 3.2 Gorman, Robert F. Great Debates at the United Nations: An Encyclopedia of Fifty Key Issues 1945-2000. pp. 256–262.