பெண்டைல் பியூட்டைரேட்டு
இதே ஓர் இரசாயன கலவை ஆகும்
பென்டைல் பியூட்டைரேட்டு (Pentyl butyrate) என்பது C9H18O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பென்டைல் பியூட்டேனோயேட்டு அல்லது அமைல் பியூட்டைரேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள் [1]. வழக்கமாக கந்தக அமில வினையூக்கியின் முன்னிலையில் பென்டனாலை பியூட்டைரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பென்டைல் பியூட்டைரேட்டைத் தயாரிக்கிறார்கள். பேரிக்காய் அல்லது சர்க்கரை பாதாமி மணத்தை நினைவூட்டுவதாக இதன் மணம் அமைந்துள்ளது. சிகரெட்டு எனப்படும் வெண்சுருட்டுகளில் பென்டைல் பியூட்டைரேட்டை கூட்டுசேர் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டைல் பியூட்டேனோயேட்டு | |
வேறு பெயர்கள்
பென்டைல் பியூட்டைரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
540-18-1 | |
ChemSpider | 10428 |
EC number | 208-739-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10890 |
| |
பண்புகள் | |
C9H18O2 | |
வாய்ப்பாட்டு எடை | 158.24 கி/மோல் |
அடர்த்தி | 0.86 கி/செ.மீ3 |
உருகுநிலை | −73.2 °C (−99.8 °F; 200.0 K) |
கொதிநிலை | 186 °C (367 °F; 459 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ N-AMYL BUTYRATE, Cameo Chemicals, National Oceanic and Atmospheric Administration