பெண்ணிய சிறுவர் இலக்கியம்
பெண்ணிய சிறுவர் இலக்கியம் (Feminist children's literature) என்பது பெண்ணியக் கண்ணோட்டத்தின் மூலம் சிறுவர் இலக்கியம் எழுதுவதாகும். சிறுவர் இலக்கியத்திற்கும் பெண் இலக்கியத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் பலவீனமாக காணப்படுவதையும் இலக்கியப் படிநிலைகளில் கீழான நிலையில் இருப்பதனையும் காணலாம். இந்த வழியில் பெண்ணியக் கருத்துக்கள் குழந்தைகளின் இலக்கியக் கட்டமைப்பில் தொடர்ந்து காணப்படுகின்றன. எனவே சிறுவர் இலக்கியப் படைப்புகளில் பெண்ணிய விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இதுவும் ஒரு வகை பெண்ணிய இலக்கியம் ஆகும் . [1] பெண்ணிய இயக்கத்திற்கு குறிப்பாக கடந்த அரை நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் முக்கிய பங்கு வகித்தது. ஃபெமினிசம் இஸ் ஃபார் எவ்ரிபடி: பேஷன்வேட் பாலிடிக்ஸ் என்ற தனது புத்தகத்தில், பெல் ஹூக்சு எழுத்து மற்றும் சிறுவர் புத்தகங்கள் உட்பட அனைத்து வகையான ஊடகங்களும் பெண்ணியக் கொள்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் பெண்ணியக் கல்விக்கு இச்சிறுவர் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது என தனது நம்பிக்கையினைத் தெரிவிக்கிறார்.
1992 வாக்கில் , புனைகதைக்காக இலக்கியத்தில் 32% புலிட்சர் பரிசுகளும் வெறும் 8% நோபல் பரிசுகளும் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டன. இருந்த போதிலும், நியூபெரி பதக்கங்களை பெண்கள் 66% வென்றுள்ளனர். இந்தப் புள்ளி விவரங்களில் இருந்து பெண் எழுத்தாளர்களே சிறுவர் இலக்கியங்களை அதிகம் எழுதுகிறார்கள் என்பது புலனாகிறது. [2]
பொதுமைப்படுத்தல்கள்
தொகுவிசித்திரக் கதைகளில் வரும் மாறாநிலை பாலின அப்பாவி கதாபாத்திரங்கள் மற்றும் தாமஸ் தெ டேக்க் எஞ்சின் சாகசங்களில் காணப்படும் இனவெறி மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியிலான கதாப்பாத்திரங்கள் ஆகியவை குழந்தைகளுக்கு நேர்மறையான முன்மாதிரிகளைத் தருவதில்லை.
லிட்டில் ரெட் ஹெனில் உள்ள கருத்துக்கள், குழுப்பணி மற்றும் கடின உழைப்பு ஆகியவை பரவலாக கவனிக்கப்படவில்லை மற்றும் அதன் முக்கிய கதாபாத்திரம் ஏழை மக்களுக்கு உணவளிக்க மறுத்த ஒரு இனவெறி முதலாளித்துவ கருத்தாக மாறியுள்ளது. [3]
பீட்டர் பான் சேவ்ஸ் லில்லியில், வரும் முக்கிய பெண் கதாப்பத்திரம் பெண் என்பதால் அவரை காட்டு மிராண்டித்தனமாகவும், படிக்காத நபராகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். [4]
பாட் ஹட்சின்சன் எழுதிய ரோஸி'ஸ் வாக் என்ற பட புத்தகம், ஒரு நரி தன்னை பண்ணையில் வேட்டையாடுவதை 'முட்டாள் பெண்மையின்' அடையாளமாக சித்தரிக்கப்படுகிறது. இருப்பினும், விமர்சகர்கள் இந்தப் படைப்பில் உள்ள நகைச்சுவைகள் புறக்கணிக்கப்பட்டது. [5]
அமெரிக்க விமர்சகர்கள் சிண்ட்ரெல்லாவை 'குறைவான பாலுணர்வு ' கொண்டதாக மீண்டும் எழுத பரிந்துரை செய்கின்றனர். சிண்ட்ரெல்லா மிகவும் அழகாக இருக்கிறாள்; அவள் சிவந்த கைகள் மற்றும் தட்டையான கால்களைக் கொண்டிருக்கிறாள், ஏனென்றால் அவள் அதிக வீட்டு வேலைகளைச் செய்கிறாள் மற்றும் சிண்ட்ரெல்லா ஒரே இரவில் பல ஆண்களுடன் நடனமாடுகிறாள் என்று அந்தப் படைப்பில் கூறப்பட்டுள்ளது. [6]
எனிட் பிளைட்டனின் தெ ஃபேமச் ஃபைவ், என்பது சிறுவர் மற்றும் சிறுமிகளை பாலியல் ரீதியாக சித்தரிப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜார்ஜினா ஒரு பெண்ணாக இருப்பதனால் மட்டுமே தலைவராக இருக்க முடியாது. அதனால் அந்தக் கதாப்பத்திரம் ஆண் போல சிறிய முடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டு ஆண்களுக்கு இருப்பது போல் ஆளுமை இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளதனை விமர்சகர்கள் கண்டிக்கின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ Nodelman, Perry (1988). "Children's Literature as Women's Writing". Children's Literature Association Quarterly 13 (1): 31–34. doi:10.1353/chq.0.0264. https://zenodo.org/record/3834173.
- ↑ Clark, Beverly (1993). "Fair Godmothers or Wicked Stepmothers?: The Uneasy Relationship of Feminist Theory and Children's Criticism". Children's Literature Association Quarterly 18 (4): 171–176. doi:10.1353/chq.0.0910.
- ↑ "The New Regressive Sport of Finding Racism and Sexism in Children's Books". SB. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Ness, Mari (25 June 2015). "Using Tinker Bell to Shake Magic into Everything: Disney's Peter Pan". Tor. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
- ↑ Towenshend, John Rowe (1976). "Racism and Sexism in Children's Books". New Community 5 (1–2): 157–160. doi:10.1080/1369183X.1976.9975447.
- ↑ Townshend, John Rowe (1976). "Racism and Sexism in Children's Books". New Community 5 (1–2): 157–160. doi:10.1080/1369183X.1976.9975447.