பெத்தகுள்ளு
பெத்தகுள்ளு (Peddakullu ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊரின் அருகில் தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த ஊரில் தென் பெண்ணை ஆற்றின் கரையில் பழமை வாய்ந்த பிரசன்ன பார்வதி தேவி உடனுறை சங்கமேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது.[2] கோயிலுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் சின்னாறு மற்றும் தென் பெண்ணையாறு என இரு ஆறுகள் சங்கமிக்கின்றன. ஆறுகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் ஆற்றின் நடுவில் திட்டுப் பாறையில் சுயம்புவாய் உருவான சிவலிங்கமும், ருத்ர பாதமும் உள்ளன. இரு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதால் இக்கோயில் இறைவன் சங்கமேசுவரர் என அழைக்கப்படுகிறார். ஒசூரில் புதியதாக அமையுள்ள ஒசூர் வெளி வட்டச்சாலை இந்த ஊரை ஒட்டி வர உள்ளதால் இந்த ஊர் வளர்ச்சிக்கும் இப்பகுதியில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை கொண்டு செல்லவும் நல்ல சாலைவசதி ஏற்பட வழி ஏற்படும்.
பெத்தகுள்ளு | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
குறிப்பு
தொகு- ↑ "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
- ↑ "முதல்வர் நலம் பெற வேண்டி 10,750 பால்குடம் ஊர்வலம்". செய்தி. தினமலர். 23 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.