பெத்தல்லா ஹெத்தையம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெத்தல்லா ஹெத்தையம்மன் கோயில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், பெத்தல்லா என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஹெத்தையம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நீலகிரி
அமைவிடம்:கோத்தகிரி, பெத்தல்லா, நீலகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குன்னூர்
மக்களவைத் தொகுதி:நீலகிரி
கோயில் தகவல்
தாயார்:ஹெத்தையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஹெத்தையம்மன் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

ஹெத்தையம்மன் தொகு

ஹெத்தையம்மன் என்ற படுக மொழிச் சொல்லுக்கு பாட்டியம்மா என்று பொருள் ஆகும். இந்த தாய் தெய்வம்தான் படுகர்களின் குலதெய்வம் ஆகும்.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

ஹெத்தையம்மன் திருவிழா தொகு

ஆண்டுதோறும் தை மாதம் ஹெத்தை ஹப்பா எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவானது முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக 25 நாட்களுக்கு முன்னர் விரதம் இருத்தல், ஒவ்வொரு விழாக் காலங்களில் ஒவ்வொரு ஞாயிறன்றும் அம்மன் அருள் வாக்கு ஆகியவை இடம் பெறுகின்றன.படுகர் இனத்தவர் பாரம்பரிய உடையுடன், பாரம்பரிய வண்ணக் குடைகளுடன் மடிமனை பகுதிக்கு சென்று அங்கு தங்கி அம்மனை வழிபடுகின்றனர். இவ்விழாவின்போது கோத்தகிரியை அடுத்த குரங்காடு சீமைக்குட்பட்ட பேரகணி, பெத்தளா, பெப்பேன், ஒன்னதலை, கூக்கல், சின்னக்குன்னூர், ஹெப்பநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.[4] விழாவின் ஒரு கட்டமாக பேரகணி மடிமனை, காத்துகுளி மடிமனை, ஒன்னதலை மடிமனை ஆகிய இடங்களில் அடுத்தடுத்த நாள்களில் விழா நடைபெறுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ந.வினோத் குமார் (6 சூலை 2018). "பாட்டியம்மன் திருவிழா". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2018.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. கோத்தகிரியில் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா துவக்கம், தினகரன், 3 ஜனவரி 2018[தொடர்பிழந்த இணைப்பு]
  5. ஹெத்தையம்மன் திருவிழா தொடக்கம், தினமணி, 4 ஜனவரி 2018