பெத்தேல்
பெத்தேல் என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பண்டைக்கால ஊர் ஆகும். பண்டைய உகரித் மொழியில் அது "பெத்-எல்" (bt il) எனப்பட்டது. அதன் பொருள் கடவுளின் (எல்) இல்லம் (பெத்) என்பதாகும்.[1]
எபிரேய மொழியில் "பெத்தேல்" בֵּית אֵל என்றும், கிரேக்கத்தில் Βαιθηλ என்றும், இலத்தீனில் Bethel என்றும் வடிவம் பெறும்.
பெத்தேல் அமைந்துள்ள இடம்
தொகுபழைய ஏற்பாட்டில் பெத்தேல் என்னும் ஊர் பெஞ்சமின் குலத்தாரும் எப்ராயிம் குலத்தாரும் வதிந்த இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய கிறித்தவ எழுத்தாளர்களாகிய யூசேபியஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் "பெத்தேல்" என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று எருசலேம் நகருக்கு வடக்கே 12 மைல் (உரோமையர் கணிப்புப்படி) தொலையில், நியாப்பொலிசு நகருக்குச் சென்ற சாலையின் கிழக்கு ஓரமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.[2]
எட்வர்ட் இராபின்சன் என்னும் அகழ்வாளர் இன்றைய பாலத்தீனத்தில் உள்ள "பெய்த்தின்" (Beitn) என்னும் ஊரே பண்டைக்கால "பெத்தேல்" என்று கூறுகிறார்.[3] பண்டைய ஏடுகள் தரும் குறிப்புகள் தவிர, "பெத்தேல்" என்னும் பெயருக்கும் "பெய்த்தின்" என்னும் பெயருக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் அடிப்படையிலும்.அவர் இம்முடிவுக்கு வருகிறார். "எல்" என்னும்.எபிரேயச் சொல்.அரபியில் "இன்" என்று மாறுவதை வழக்கமே என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.[2]
1968இல் பாலத்தீனத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றிய இசுரயேல் நாடு, "பெய்த்தின்" ஊருக்கு அருகே ஒரு குடியிருப்பை உருவாக்கி, அதற்கு "பெய்த்தேல்" (Beit El) என்று பெயரிட்டது.
விவிலியக் குறிப்புகள்
தொகுவிவிலியத்தில் யோசுவா நூலில் (12:16) தெற்கு அரசாகிய யூதாவில் அமைந்த "பெத்தேல்" பற்றிய குறிப்பு உள்ளது. அது சிமியோன் குலத்தவர் வாழ்ந்த "பெத்துல்" அல்லது "பெத்துவேல்" என்னும் ஊராக இருக்கலாம்.என்று கருதப்படுகிறது.
"பெத்தேல்" என்னும் ஊர் விவிலிய நூலாகிய தொடக்க நூலில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் குறிப்பு தொடக்க நூலின் 12ஆம் அதிகாரத்தில் உள்ளது.
“ | ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். | ” |
மற்றொரு சிறப்பான குறிப்பு தொடக்க நூலின் 28ஆம் அதிகாரத்தில் உள்ளது. அதில் யாக்கோபு பெத்தேல் ஊரில் கண்ட கனவு விவரிக்கப்படுகிறது (28:10-23):
“ | 10 யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, காரானை நோக்கிச் சென்றான்.
|
” |
இன்னொரு விவிலியக் குறிப்பு தொடக்க நூலின் 35ஆம் அதிகாரத்தில் உள்ளது (35:6-8):
“ | 6 இவ்வாறு யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.
|
” |
"லூசு" என்னும் பழைய கனானேயப் பெயர் "பெத்தேல்" என்று மாற்றம் பெற்றதுபோல, அங்கேயே யாக்கோபுவின் பெயரைக் கடவுள் "இஸ்ரயேல்" என்று மாற்றினார்.
பெத்தேல் வழிபாட்டு இடமாக மாறுதல்
தொகுதாவீது மற்றும் சாலமோன் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கு நாடாகிய இஸ்ரயேலும் தெற்கு நாடாகிய யூதாவும் ஒரே நாட்டின் பகுதிகளாக இருந்தன. அதன் பிறகு நாடு பிளவுண்டது. 1 அரசர்கள் என்னும் விவிலிய நூல் கீழ்வரும் வரலாற்றைத் தருகிறது (1 அரசர்கள் 12:25-33):
“ | 25 எரொபவாம், எப்ராயிம் மலைநாட்டில் செக்கேமைக் கட்டி எழுப்பி, அங்குக் குடியிருந்தான். பின்பு அங்கிருந்து வெளியேறிப் பெனுவேலைக் கட்டி எழுப்பினான்.
|
” |
அசீரியர்களின் ஆட்சிக்காலத்தில் பெத்தேல்
தொகுஅசீரியர்கள் கிமு 721இல் இசுரயேல் மீது படையெடுத்துவந்தனர். அப்போது பெத்தேல் அழிவிலிருந்து தப்பியது. ஆனால் யூதா நாட்டு அரசராகிய யோசியா (கிமு சுமார் 640-609) படையெடுத்தபோது பெத்தேலில் இருந்த வழிபாட்டு இடத்தைத் தரைமட்டமாக்கினார் (2 அரசர்கள் 23:15).[4]
பிற்காலத்தில் பெத்தேல்
தொகுமக்கபேயர் காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு) பெத்தேல் நகரில் மக்கள் மீண்டும் குடியேறினர். காப்புச் சுவர்களும் கட்டப்பட்டன.[2]
உரோமைப் பேரரசன் வெஸ்பாசியான் பெத்தேலைக் கைப்பற்றினார் என்று பண்டை கிறித்தவ எழுத்தாளர் யோசேபுஸ் கூறுகிறார். யோசேபுஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் தருகின்ற குறிப்புகளுக்குப் பிறகு பெத்தேல் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், இன்று பாலத்தீனத்தில் உள்ள "பெய்த்தின்" என்னும் இடத்தில் விரிவாக்கம் நடந்ததையும், நடுக்காலத்தில் கிறித்தவக் கோவில் இருந்ததையும் அறிய முடிகிறது என்று அகழ்வாளர் எட்வர்ட் இராபின்சன் கூறுகிறார்.[2]
ஆமோஸ் நூலில் பெத்தேல்
தொகுபெத்தேல் பற்றிய குறிப்புகள் ஆமோஸ் நூலிலும் உள்ளன:
“ | ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள்...பெத்தேல் பாழாக்கப்படும் (5:5). | ” |
“ | அமட்சியா ஆமோசைப் பார்த்து, '...பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே' என்றார் (7:10-13 | ” |
ஆதாரங்கள்
தொகுநூற்பட்டியல்
தொகு- Bleeker, C. J.; Widengren, G. (1988), Historia Religionum: Handbook for the History of Religions, BRILL, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004089284, 9789004089280
{{citation}}
: Check|isbn=
value: invalid character (help) - Robinson, Edward; Smith, Eli (Digitized 17 February 2006), Biblical Researches in Palestine, 1838–52: A Journal of Travels in the Year 1838, University of Michigan
{{citation}}
: Check date values in:|date=
(help) - Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite