பெந்தியாலா (இசையமைப்பாளர்)
பெந்தியாலா நாகேசுவர ராவ் ( Pendyala Nageswara Rao ) (6 மார்ச் 1917- ஆகஸ்ட் 1984) ஓர் இந்திய இசையமைப்பாளரும், பல இசைக்கருவிகளை இயக்கும் கலைஞரும், நடத்துனரும், இசை தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் கன்னடம் தெலுங்குத் திரைப்படத்துறைகளில் தனது படைப்புகளுக்காக அறியப்படுகிறார்.[1][2]
பெந்தியாலா | |
---|---|
இயற்பெயர் | பெந்தியாலா நாகேசுவர ராவ் |
பிறப்பு | 6 மார்ச் 1917 |
பிறப்பிடம் | வனுகூரு, பெனமலுரு மண்டலம், கிருஷ்ணா மாவட்டம், இந்தியா |
இறப்பு | 31 ஆகஸ்ட் 1984 |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் கைம்முரசு இணை தோலக் மிருதங்கம் புல்லாங்குழல் மின்சார கித்தார் கின்னரப்பெட்டி வயலின் |
இசைத்துறையில் | 1934–1984 |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஆந்திரப் பிரதேசம் விசயவாடாவுக்கு அருகிலுள்ள வனுகூரில் பிறந்தார். நடிகர் மிக்கிலினேனியும் இவரும் கபிலவை ராமநாத சாஸ்திரியின் மாணவர்களாக இருந்தனர். [1][3]
இவரது தந்தை சீதாராமையா உட்பட இவரது மூதாதையர்கள் இசைக் கலைஞர்களாக இருந்தனர். இதேபோல் இவரும் குழந்தை பருவத்திலிருந்தே இசையில் ஆர்வம் காட்டினார். இவர் தனது தந்தையின்டன் நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசித்து வந்தார். கிருஷ்ண துலாபாரம் நாடகத்தில் ஜம்பாவதியாக முதல் முறையாக நடித்தார். பின்னர் ஜோன்னவிட்டுல சேஷகிரி, உருசியேந்திரமணி, லட்சுமிராஜ்ஜியம் ஆகியோருடன் துலாபாரம் நாடகத்தில் ருக்மிணி, [நாரதர்]] கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
அந்தக் காலகட்டத்தில் இவரது திறமைகளைப் பார்த்த கடாரு நாகபூஷன், தல்லி பிரேமா (1941) திரைப்படத்திற்காக தனது இசைக்குழுவில் பணியாற்ற அழைத்தார். சென்னைக்குச் சென்று ராஜராஜேஸ்வரி பிலிம்ஸில் சேர்ந்து தினகர் ராவ் மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன் ஆகியோருக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன் வீடு திரும்பினார். பின்னர் காளி பெஞ்சலா நரசிம்ம ராவின் கீழ் மாயலோகம் பத்தில் ஆர்மோனியம் வாசிப்பவராக பணியாற்ற குடவல்லி ராமபிரம்மத்தால் அழைக்கப்பட்டார். கோ. சூ. பிரகாஷ் ராவ் தனது துரோகி என்ற படத்திற்காக இவரை முழு இசையமைப்பாளராக்கினார். இது இவருக்கு நல்ல புகழைக் கொண்டு வந்தது. சுமார் 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவற்றில் சில மறக்கமுடியாத வெற்றிப் படங்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Nata Ratnalu, Mikkilineni Radhakrishna Murthy, Second edition, 2002; pp:582-4.
- ↑ Narasimham, M. L. (2015-11-19). "Blast from the past: Jayabheri (1959)". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/jayabheri-1959/article7895558.ece.
- ↑ Your Personal Radio (?). "Remembering Legends - Pendyala Nageswara Rao (2014) - Pendyala Nageshwara Rao - Listen to Remembering Legends - Pendyala Nageswara Rao songs/music online - MusicIndiaOnline". Mio.to. Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.