புனித ஆசிர்வாதப்பர் சபை
புனித ஆசிர்வாதப்பர் சபை அல்லது புனித பெனடிக்டன் சபை (OSB; இலத்தீன்: Ordo Sancti Benedicti), என்பது தன்னாட்சி அதிகாரமுடைய, நூர்சியாவின் பெனடிக்டின் துறவற சட்டங்களின்படி நடக்கும் துறவியர் இல்லங்கள், மடங்கள், ஆதீனங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு கத்தோலிக்க துறவற சபை ஆகும். இவ்வகை இல்லங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றிருப்பதால், இவற்றிற்கு தலைமையகம் ஏதும் இல்லை. இவை அனைத்தின் ஒருமித்த தேவைகளையோ அல்லது நிலைப்பாட்டையோ எடுத்துரைக்க பெனடிக்டன் கூட்டமைப்பு உள்ளது. இக்கூட்டமைப்புக்கு இவ்வில்லங்களின்மீது எவ்வகை அதிகாரமும் இல்லை. இக்கூட்டமைப்பு 1883இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் Summum semper என்னும் அறிக்கையினால் நிறுவப்பட்டது. இக்கூட்டமைப்பின் தலைவர் தன்னாட்சித் ஆதீனத் தலைவர் (Abbot Primate) என அழைக்கப்படுகின்றார்.
Ordo Sancti Benedicti | |
புனித ஆசிர்வாதப்பர் பதக்கம் | |
சுருக்கம் | OSB |
---|---|
உருவாக்கம் | அண். கி.பி 529 |
நிறுவனர் | நூர்சியாவின் பெனடிக்ட் |
வகை | கத்தோலிக்க அர்ப்பணவாழ்வுச் சபை |
தலைமையகம் | புனித அன்சல்மோ கோவில், உரோமை |
தன்னாட்சித் ஆதீனத் தலைவர் | Notker Wolf O.S.B., |
மைய அமைப்பு | பெனடிக்டன் கூட்டமைப்பு |
வலைத்தளம் | osb |
இவர்களின் உடையின் நிறத்தால் இவர்களை கருப்பு துறவியர் எனவும் அழைப்பர். இச்சபையின் உறுப்பினர்கள் OSB என்னும் சுறுக்கக்குறியினை தங்களின் பெயர்களுக்குப்பின் சேர்ப்பது வழக்கம்.
இச்சபையின் உறுப்பினராக இருந்த திருத்தந்தையர்கள்
தொகு- திருத்தந்தை முதலாம் கிரகோரி (c540–604, r. 590–604)
- திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்தர் (c 946–1003, r. 999–1003)
- திருத்தந்தை ஏழாம் கிரகோரி (c 1020–85, r. 1073–85)
- திருத்தந்தை மூன்றாம் விக்டர் (c 1026–87, r. 1086–87)
- திருத்தந்தை இரண்டாம் பாஸ்கால் (d. 1118, r. 1099–1118)
- திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் (d. 1119, r. 1118–19)
- திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீன் (1215–96, r. 1294)
- திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட் (1291–1352, r. 1342–52)
- திருத்தந்தை ஐந்தாம் அர்பன் (1310–70, r. 1362–70)
- திருத்தந்தை ஏழாம் பயஸ் (1742–1823, r. 1800–23)
- திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (1765–1846, r. 1831–46)