ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை)
திருத்தந்தை ஐந்தாம் அர்பன் (இலத்தீன்: Urbanus V; 1310 – 19 டிசம்பர் 1370), இயற்பெயர் வில்லியம் தெ க்ரிமோர்த்,[1] என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 28 செப்டம்பர் 1362 முதல் 1370இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவர் பெனடிக்டன் சபையினர். அவிஞ்ஞோன் ஆட்சிக்காலத்தில் ஆட்சிசெய்த ஆறாம் திருத்தந்தை.
அருளாளர் திருத்தந்தை ஐந்தாம் அர்பன் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 28 செப்டம்பர் 1362 |
ஆட்சி முடிவு | 19 டிசம்பர் 1370 |
முன்னிருந்தவர் | ஆறாம் இன்னசெண்ட் |
பின்வந்தவர் | பதினொன்றாம் கிரகோரி |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1334 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 6 நவம்பர் 1362 அன்டோயின் அபெர்ட்-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | வில்லியம் தெ க்ரிமோர்த் |
பிறப்பு | 1310 கிரிசாக், லான்குடோக், பிரான்சு அரசு |
இறப்பு | அவிஞ்ஞோன், திருத்தந்தை நாடுகள் | 19 திசம்பர் 1370
வகித்த பதவிகள் |
|
புனிதர் பட்டமளிப்பு | |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை |
பகுப்பு | அருளாளர் |
முத்திப்பேறு | 10 மார்ச் 1870 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்-ஆல் |
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
இவர் பேரறிஞராகவும், புனிதராகவும் பலராலும் போற்றப்பட்டவர்.[2] திருத்தந்தையாக தேர்வானப்பின்பும் இவர் பெனடிக்டன் சபை சட்டங்களைப் பின்பற்றி எளிய வாழ்வு வாழ்ந்தார். திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1870இல் இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். அவிஞ்ஞோன் ஆட்சிக்காலத்தில் ஆட்சிசெய்த திருத்தந்தையருள் முத்திபேறுபட்டம் பெற்ற ஒரே திருத்தந்தை இவர் ஆவார்.
இவர் தனது ஆட்சிக்காலத்தில் திருச்சபையினைச் சீரமைக்க முயன்றார். பல கோயில்களையும் மடங்களையும் புதுப்பித்தார். இவர் தனது ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்போது கொண்ட குறிக்கோளான பெரும் சமயப்பிளவினை முடிவுக்குக் கொணரப் பெரிதும் முயன்றார். ஆயினும் இவரின் முயற்சி பலனளிக்கவில்லை.[3]