பெனாசிர் பூட்டோ மருத்துவமனை
பெனாசிர் பூட்டோ மருத்துவமனை (Benazir Bhutto Hospital) பாக்கித்தான் நாட்டின் இராவல்பிண்டி நகரத்திலுள்ள முர்ரி சாலையில் அமைந்துள்ளது. இராவல்பிண்டி பொது மருத்துவமனை என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. அடிப்படை மருத்துவம், மனநல மருத்துவம், எலும்பியல், சிறுநீரகம் மற்றும் இருதயவியல் போன்ற துறைகளில் சிகிச்சயையும் கற்பித்தலையும் வழங்கும் பொது மருத்துவமனையாக இம்மருத்துவமனை செயல்படுகிறது. இராவல்பிண்டி மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. [1] [2] [3]
2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பெனாசிர் பூட்டோ இங்குதான் இறந்தார்.
வரலாறு
தொகுபெனாசிர் பூட்டோ மருத்துவமனை 1957 ஆம் ஆண்டு மாவட்ட [4] மருத்துவமனையாக திறக்கப்பட்டது.
துறைகள்
தொகு- மருந்து
- அறுவை சிகிச்சை
- பெண்ணோயியல் & மகப்பேறியல்
- காது மூக்கு தொண்டை
- கண் மருத்துவம்
- நோயியல்
- மனநல மருத்துவம் (மனநல மருத்துவக் கழகமாக மேம்படுத்தப்பட்டது)
- எலும்பியல் அறுவை சிகிச்சை
- சிறுநீரகவியல்
- கதிரியக்கவியல்
- இதயவியல்
- தோல் மருத்துவம்
மனநல மருத்துவத் துறையானது பஞ்சாபில் முதன்முறையாக மனநல மருத்துவக் கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மனநலக் கழகம் மனநலத்திற்கான உலக் சுகாதார மையத்தின் பிராந்திய மையமாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Pakistan Medical Schools". 23 April 2002. Archived from the original on 2007-12-29. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
- ↑ "Nine areas in capital sealed after Covid-19 outbreak". 4 June 2020. https://www.dawn.com/news/1561213.
- ↑ "Punjab government closes down Covid-19 wards in three Rawalpindi hospitals". 12 August 2020. https://www.dawn.com/news/1573906.
- ↑ "Benazir Bhutto Hospital". Government of the Punjab. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.