பென்சீன்டையசோனியம்குளோரைடு
பென்சீன்டையசோனியம்குளோரைடு (Benzenediazonium chloride) என்பது [C6H5N2]Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன் ஈரசோனியம் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஈரசோனியம் நேர்மின் அயனியும் குளோரைடு எதிர்மின் அயனியும் இணைந்து பென்சீன்டையசோனியம்குளோரைடு உப்பு உருவாகிறது. நிறமற்ற திண்மமாகக் காணப்படும் இவ்வுப்பு தண்ணீர் உள்ளிட்ட முனைவுக் கரைப்பான்களில் கரைகிறது. அரைல் ஈரசோனியம் சேர்மங்களுக்கு இவ்வுப்பே தாய் உறுப்பினராகக் கருதப்படுகிறது [1]. இவ்வுப்பு நிலைத்தன்மை அற்ற காரணத்தால் அரைல் ஈரசோனியம் சேர்மங்கள் கரிம வேதியியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வர்த்தகரீதியாக பென்சீன்டையசோனியம்குளோரைடு விற்கப்படுவதில்லை என்றாலும் தேவையின் அடிப்படையில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது.
The benzenediazonium ion
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்சீன்டையசோனியம்குளோரைடு
| |
வேறு பெயர்கள்
பீனைல்டையசோனியம்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
100-34-5 | |
ChemSpider | 54953 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 60992 |
| |
UNII | 3U50A1GI4F |
பண்புகள் | |
C6H5ClN2 | |
வாய்ப்பாட்டு எடை | 140.57 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | சிதையும் |
கொதிநிலை | சிதையும் |
நன்கு கரையும், நீருறிஞ்சும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நிலைப்புத்தன்மையற்ரது,வெடிப்பதற்கு வாய்ப்புண்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅனிலினை ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்தி பென்சீன்டையசோனியம்குளோரைடு உருவாக்கப்படுகிறது[2]. அனிலினுடன் வினைபுரிவதற்குத் தேவையான நைட்ரசு அமிலம் தளத்தில் உருவாக்கப்பட்டு வினை நிகழவேண்டும்.
- C6H5NH2 + HNO2 + HCl → [C6H5N2]Cl + 2 H2O
வினையின்போது ஈரசோனியம் உப்பு சிதைவடைதலை குறைக்க தாழ்வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. நைட்ரைட்டு எசுத்தர்களை HCl முன்னிலையில் அனிலினுடன் சேர்த்து வினைபடுத்தினாலும் ஈரசோனியம் குளோரைடு தயாரிக்க இயலும். ஆல்ககால்களுடன் நைட்ரசு அமிலம் சேர்ப்பதால் நைட்ரைடு எசுத்தர்கள் உருவாகின்றன [3]
- C5H11ONO + HCl + C6H5NH2 → [C6H5N2]Cl + C5H11OH + H2O.
வேதிப்பண்புகள்
தொகுஈரசோனியக் குழுவை (N2) பல்வேறு எதிர்மின் அயனிக் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்ய இயலும். இதன் விளைவாக பதிலீடு செய்யப்பட்ட பீனைல் வழிப்பொருட்கள் உருவாகின்றன.
- C6H5N2+ + Nu− → C6H5Nu + N2
சிகீமான் வினை, சான்டுமேயர் வினை, கோம்பெர்க்-பாச்மான் வினை போன்ற பெயர்வினைகளால் இம்மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆலைடு, SH−, CO2H−, OH− போன்ற குழுக்கள் N2 குழுவை இடப்பெயர்ச்சி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஈரசோனியப்பிணைப்பு வினைகள் சாயத் தொழிற்சாலைகளில் குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டுள்ளன.
முன்பாதுகாப்பு
தொகுபென்சீன்டையசோனியம்குளோரைடு வெடிக்கும் இயல்புடையது ஆகும்[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ March, J. (1992). Advanced Organic Chemistry (4th ed.). New York: J. Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-60180-2.
- ↑ Flood, D. T. (1933). "Fluorobenzene". Organic Syntheses 13: 46. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0295.; Collective Volume, vol. 2, p. 295 The procedure described the tetrafluoroborate salt of phenyldiazonium.
- ↑ Jain, S. K. (2009). Conceptual Chemistry for class XII. New Delhi: S. Chand & Company. pp. 1179–1183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-1623-2.
- ↑ Nesmajanow, A. N. (1932). "β-Naphthylmercuric chloride". Organic Syntheses 12: 54. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0432.; Collective Volume, vol. 2, p. 432