பென்சைல் சாலிசிலேட்டு
பென்சைல் சாலிசிலேட்டு (Benzyl salicylate) என்பது C14H12O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு சாலிசிலிக் அமில பென்சைல் எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் ஒரு நறுமண சேர்க்கைப் பொருளாக அல்லது புற ஊதா ஒளி உறிஞ்சி ஒப்பனைப் பொருளாக இவ்வேதிச் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட நிறமற்ற திரவமாகவும் தோற்றமளிக்கிறது. சற்றே பிசின் போன்ற மிகவும் மெல்லிய இனிப்பு-மலரின் வாசனை கொண்டது என்றும் பென்சைல் சாலிசிலேட்டு விவரிக்கப்படுகிறது, சுவடு அளவுக்கு இச்சேர்மத்துடன் கலந்துள்ள மாசுக்களினால் மட்டுமே இவ்வாசன ஏற்படுகிறது ஆனால் இச்சேர்மத்திற்கென தனிப்பட்ட வாசனை கிடையாது என்றும் கூறப்படுகிறது [1] It occurs naturally in a variety of plants and plant extracts and is widely used in blends of fragrance materials.[2]. பெரும்பாலான தாவரங்களின் சாறிலிருந்து இயற்கையிலே இது தோன்றுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்சைல் 2-ஐதராக்சிபென்சோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
118-58-1 | |
ChEMBL | ChEMBL460124 |
ChemSpider | 8060 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8363 |
| |
பண்புகள் | |
C14H12O3 | |
வாய்ப்பாட்டு எடை | 228.25 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.17 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இந்த வேதிப்பொருளால் மக்களுக்கு தீங்கு ஏற்படக்கூடும் என்பதற்கான சில சான்றுகள் உணரப்பட்டுள்ளன [3]. இதன் விளைவாக அனைத்துலக நறுமண சங்க அமைப்பு நறுமண திரவியமாக இந்தப் பொருளை பயன்படுத்த தடை விதித்துள்ளது [4].
சில செயற்கைப் படிகங்களின் கரைப்பானாகவும் கார்னேசன், மல்லிகை போன்ற வெண்மலர்கள், இளஞ்சிவப்பு நிற மலர்கள் போன்ற மலர் வாசனை திரவியங்களில் சமநிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது [5].
மேற்கோள்கள்
தொகு- ↑ Steffen Arctander: Perfume and Flavor Chemicals. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-931710-37-5
- ↑ "Benzyl salicylate". The Good Scents Company.
- ↑ "Toxicologic and Dermatologic Assessments for Three Groups of Fragrance Ingredients: 1) Related Esters and Alcohols of Cinnamic Acid and Cinnamic Alcohol, 2) Ionones, 3) Salicylates". Food and Chemical Toxicology 45 (Supplement 1). 2007. doi:10.1016/j.fct.2007.09.087. http://www.rifm.org/doc/Food%20%26%20Chem%20Tox%20RIFM%20Spec%20Suppl%20122007.pdf. பார்த்த நாள்: 2019-02-23.
- ↑ "Standards Restricted". International Fragrance Association. Archived from the original on 2012-01-04.
- ↑ An Introduction to Perfumery by Curtis & Williams 2nd Edition, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9608752-8-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-870228-24-4