பென்சோதயசோல்

பென்சோதயசோல் (Benzothiazole) என்பது C7H5NS என்ற என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் பல்லினவளையச் சேர்மமான இது நிறமற்றதாகவும் பாய்ம நீர்மமாகவும் காணப்படுகிறது. மூலச் சேர்மமான பென்சோதயாசோல் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இதன் பல வழிப்பெறுதிகள் வணிகப் பொருட்களில் அல்லது இயற்கையில் காணப்படுகின்றன. மின்மினிப் பூச்சி லூசிபெரின் பென்சோதயசோலின் வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது.

பென்சோதயசோல்
Space filling model of benzothiazole
Space filling model of benzothiazole
Ball-and-stick model of benzothiazole
Ball-and-stick model of benzothiazole
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-பென்சோதயசோல்
இனங்காட்டிகள்
95-16-9 Y
ChEBI CHEBI:45993 Y
ChEMBL ChEMBL510309 Y
ChemSpider 6952 Y
InChI
  • InChI=1S/C7H5NS/c1-2-4-7-6(3-1)8-5-9-7/h1-5H Y
    Key: IOJUPLGTWVMSFF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H5NS/c1-2-4-7-6(3-1)8-5-9-7/h1-5H
    Key: IOJUPLGTWVMSFF-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7222
  • n1c2ccccc2sc1
UNII G5BW2593EP Y
பண்புகள்
C7H5NS
வாய்ப்பாட்டு எடை 135.1863 கி/மோல்
அடர்த்தி 1.238 கி/மி.லி
உருகுநிலை 2 °C (36 °F; 275 K)
கொதிநிலை 227 முதல் 228 °C (441 முதல் 442 °F; 500 முதல் 501 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

பென்சோதயாசோல்கள் பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட 5-உறுப்புகளுள்ள 1,3-தயாசோல் வளையத்தைக் கொண்டிருக்கும். இருவளையங்களில் உள்ள ஒன்பது அணுக்களும் உடன் இணைக்கப்பட்டுள்ள பதிலீடுகளும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.

2-மெர்காப்டோ அனிலின் எனப்படும் 2-அமினோதயோபீனால் சேர்மத்துடன் அமிலக் குளோரைடுகளைச் சேர்த்து சூடுபடுத்தினால் பென்சோதயசோல் சேர்மத்தை தயாரிக்க இயலும்:[1]

C6H4(NH2)SH + RC(O)Cl → C6H4(NH)SCR + HCl + H2O

பயன்கள்

தொகு

பென்சோதயாசோல் சில உணவுகளில் இயற்கையாகவே தோன்றுகிறது. ஆனால் உணவு சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2] கந்தக வாசனையும் இறைச்சி சுவையும் கொண்டதாக உள்ளது.[3] ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மதிப்பீட்டில், சுவையூட்டும் பொருளாக உட்கொள்ளும் மதிப்பிடப்பட்ட அளவுகளில் பாதுகாப்புக் கவலை ஏதுமில்லை.[4]

மூலக்கூறின் பல்லின வளைய உள்ளகம் தயாசோல் வளையத்தில் உள்ள தனித்துவமான மெத்தைன் மையத்தில் எளிதாக பதிலீடு செய்யப்படுகிறது. இப்பகுதி தயோபிளேவின் போன்ற சாயங்களில் பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு வெப்ப நிலைத்தன்மை கொண்ட எலக்ட்ரான்-திரும்பப் பெறும் பகுதி ஆகும்.[5] சில மருந்துகளும் இந்த குழுவைக் கொண்டிருக்கின்றன. ரிலுசோல் மற்றும் பிரமிபெக்சோல் என்பவை எடுத்துக்காட்டுகளாகும். இரப்பரின் கந்தக வலிவூட்டலுக்கான முடுக்கிகள் 2-மெர்காப்டோபென்சோதயாசோல்களை அடிப்படையாகக் கொண்டவை.[6] இந்த வளையம் நேரியல் அல்லாத ஒளியியலில் ஒரு சாத்தியமான அங்கமாகும்.[7] பென்சோதயசோல் வழிப்பெறுதி ஆர்சனிக்கை கண்டறிதலுக்கான சாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. T. E. Gilchrist "Heterocyclic Chemistry" 3rd Edition, Longman, 1992.
  2. Lucille Le Bozec, Christopher J. Moody "Naturally Occurring Nitrogen–Sulfur Compounds. The Benzothiazole Alkaloids" Australian Journal of Chemistry 62(7) 639–647.எஆசு:10.1071/CH09126
  3. "Benzothiazole". The Good Scents Company. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  4. "Flavouring Group Evaluation 76, (FGE.76) - Consideration of sulphur-containing heterocyclic compounds evaluated by JECFA (59th meeting) structurally related to thiazoles, thiophene, thiazoline and thienyl derivatives from chemical group 29, miscellaneous". EFSA Journal 6 (11): 875. 2008. doi:10.2903/j.efsa.2008.875. 
  5. Gill, Rupinder K.; Rawal, Ravindra K.; Bariwal, Jitender (2015). "Recent Advances in the Chemistry and Biology of Benzothiazoles". Archiv der Pharmazie 348 (3): 155–178. doi:10.1002/ardp.201400340. பப்மெட்:25682746. 
  6. Engels, H.-W., Weidenhaupt, H.-J., Pieroth, M., et al. "Rubber, 4. Chemicals and Additives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2004, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a23_365.pub2
  7. Hrobarik, P.; Sigmundova, I.; Zahradnik, P. et al. (2010). "Molecular Engineering of Benzothiazolium Salts with Large Quadratic Hyperpolarizabilities: Can Auxiliary Electron-Withdrawing Groups Enhance Nonlinear Optical Responses?". Journal of Physical Chemistry C 114 (50): 22289–22302. doi:10.1021/jp108623d. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சோதயசோல்&oldid=4012287" இலிருந்து மீள்விக்கப்பட்டது