பென்சோவளையபியூட்டீன்
பென்சோவளையபியூட்டீன் (Benzocyclobutene) என்பது C8H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் பென்சீன் வளையம் வளைய பியூட்டீன் வளையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பைசைக்ளோ[4.2.0]ஆக்டா-1,3,5-டிரையீன் | |
வேறு பெயர்கள்
பென்சோவளையபியூட்டீன்
பெ.வ.பி பென்சோசைக்ளோபியூட்டீன் | |
இனங்காட்டிகள் | |
694-87-1 | |
ChEBI | CHEBI:87328 |
ChemSpider | 62868 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 69667 |
| |
UNII | MF7U8F3YLB |
பண்புகள் | |
C8H8 | |
வாய்ப்பாட்டு எடை | 104.15 g·mol−1 |
அடர்த்தி | 0.957 கி/செ.மீ3 |
கொதிநிலை | 150 °C (302 °F; 423 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.541 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஒளியுணர் பலபடிகளை உருவாக்க பென்சோவளையபியூட்டீன் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நுண் மின்-பொறியியல் கருவிகள் மற்றும் நுண் மின்னணுவியல் செயலாக்கத்தில் பயன்படுத்த பென்சோவளையபியூட்டீன் அடிப்படையிலான பலபடி மின்கடத்தா பல்வேறு அடி மூலக்கூறுகளில் பயன்படுத்தப்படுகிறது. செதில் பிணைப்பு, ஒளியியல் உள்பிணைப்புகள், உள்விழி நரம்பு உள்வைப்புகள் போன்றவையும் இதன் பயன்பாடுகளில் அடங்கும்.
வினைகள்
தொகுபென்சோசைவளைய பியூட்டீனை தோராயமாக 180 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தும் போது, வளையபியூட்டீன் ஒரு வளைய-திறப்பு வினைக்கு உட்படுகிறது. இது ஆர்த்தோ-சைலைலீனை உருவாக்குகிறது. இந்த செயல்முறை பென்சீன் வளையத்தின் அரோமாட்டிக்கு பண்பை அழிப்பதால், தலைகீழ் வினை மிகவும் விரும்பப்படுகிறது.
இந்த வழியில் உருவாக்கப்பட்ட ஆர்த்தோ-சைலைலீன்கள் வளையக்கூட்டு வினைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது பென்சீன் வளையத்திற்கு அரோமாட்டிக்கு பண்பை மீட்டெடுக்கிறது, அதே நேரத்தில் ஒரு புதிய வளையவடிவ இனத்தை உருவாக்குகிறது.[2]
பயன்கள்
தொகுபென்சோவளையபியூட்டீன் நோக்குருவானது ஐவாபிராடின் மற்றும் எசு33005 போன்ற மருந்தியல் பண்புகளுடன் கூடிய பல இரசாயன சேர்மங்களில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக 4-புரோமோ-2,5-டைமெத்தாக்சிபீனெத்திலமீன் என்ற பென்சோவளையபியூட்டீன் ஒப்புமை ஒன்றும் தயாரிக்கப் பயன்படுகிறது.[3] பென்சோவளையபியூட்டீன் வழிப்பெறுதியாக ஆம்பெடமைன் தயாரிக்கப்பட்டு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 164410 Benzocyclobutene 98%
- ↑ Mehta, G.; Kotha, S. (2001). "Recent chemistry of benzocyclobutenes". Tetrahedron Lett. 57 (4): 625–659. doi:10.1016/s0040-4020(00)00958-3. http://eprints.iisc.ac.in/2691/1/01-SRK-Tetra-625.pdf.
- ↑ "The Binding Database".
- ↑ US 3149159, "Substituted 7-aminoalkylbicyclo-[4. 2. 0]octa-1,3,5-trienes"