பென்பெரிடால்
பென்பெரிடால் (Benperidol) என்பது பியூடிரோபீனோன் வழிப்பொருளைச் சார்ந்த ஆற்றல் மிகு மருந்தாகும். இது ஐரோப்பிய சந்தையில் மிகவும் திறன் வாய்ந்த 75 முதல் 100 வரை நிகர்மைத் தன்மை கொண்ட குளோர்புரோமசைன் உடைய உளப்பிணி மருந்தாகும். வேளை மருந்தளவில் ஹாலோபெரிடால் உடன் ஒப்பிடும் பொழுது இது 150 முதல் 200 விழுக்காடு அதிகத் திறன் வாய்ந்தது ஆகும்.[1]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
1-{1-[4-(4-புளோரோபினைல்)-4-ஆக்சோபியூடைல்]பிப்பெரிடின்-4-ஐல்}-1,3-டைஐதரோ-2H-பென்சிமிடசோல்-2-ஓன் | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ?-only (அமெரிக்கா) |
வழிகள் | Oral |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 983-42-6 |
ATC குறியீடு | N05AD07 |
பப்கெம் | CID 16363 |
ChemSpider | 15521 |
UNII | 97O6X78C53 |
ChEMBL | CHEMBL297302 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C22 |
மூலக்கூற்று நிறை | 381.443 g/mol |
SMILES | eMolecules & PubChem |
இது பேதபித்து என்னும் மனப்பித்து[2] நோயைக் குணப்படுத்தும் சிகிச்சையில் மனக்குழப்ப நீக்கியாகச் செயல்படுகிறது. ஆனால் இது சமூக எதிர்ச் செயலினரை நெறிப்படுத்தவும், அதி பாலியல் நாட்டம் உடையவர்களை[3] சமநிலைப்படுத்தவும் பெரிதும் பயன்படுகிறது.
பாலியல் குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை அடைந்து வெளியில் செல்லும் போது அவர்களை ஆற்றுப்படுத்தவும் சைப்ரோடீரோன் அசிட்டேட்டினைப் போல[4] ஆண்மையூக்கிக்கு எதிரான மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பென்பெரிடால் மருந்து 1961 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொகுப்பு
தொகுசான்றுகள்
தொகு- ↑ Möller; Müller; Bandelow: Neuroleptika, 2001, WVG; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8047-1773-X (in German)
- ↑ Bobon J, Collard J, Lecoq R, Benperidol and promazine: a "double blind" comparative study in mental geriatrics, Acta Neurol Belg. 1963 Oct;63:839-43.
- ↑ British National Formulary (49th), British Medical Association 2005 p 183
- ↑ Murray MA, Bancroft JH, Anderson DC, Tennent TG, Carr PJ., Endocrine changes in male sexual deviants after treatment with anti-androgens, oestrogens or tranquillizers, Journal of Endocrinology. 1975 Nov;67(2):179-88.
- ↑ BE 626307 (1963 to Janssen), C.A. 60, 10690c (1964), corresp. to GB 989755.