பெயித் (Beit) என்பது பெயிட் என்றும் உச்சரிக்கப்படுகிறது. (அரபு மொழி: بيت‎  pronounced [beːt, bi(ː)t, bajt]) இதன் பொருள் வீடு என்பதாகும். இது அரபு, ஈரானிய, உருது மற்றும் சிந்தி கவிதைகளின் மீட்டர் அளவுசார் அலகு ஆகும். இது ஒரு கோட்டினை ஒத்திருக்கிறது. இருப்பினும் சில சமயங்களில் தவறாக "ஈரடி" எனப் பொருள் வழங்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயித்தும் இரண்டு, மூன்று அல்லது நான்கு அடிகள் அல்லது 16 முதல் 32 எழுத்துக்களைக் கொண்ட சம நீளமுள்ள இரண்டு நிரம்பாச் செய்யுள் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.[1]

வில்லியம் அலெக்சாண்டர் க்ளூஸ்டன், அரேபிய உரைநடையின் இந்த அடிப்படைப் பகுதி பெடோயின்கள் அல்லது பாலைவன அரேபியர்களிடமிருந்து உருவானது என்று முடிவு செய்தார். ஏனெனில், ஒரு வரியின் வெவ்வேறு பகுதிகளின் பெயரிடலில், "கூடாரம்-கம்பம்", மற்றொன்று "கூடார-முளை" என்று அழைக்கப்படுகிறது. இரண்டு அரைகுறைகள் மடிப்பு அல்லது இலை என இரட்டை மடிப்பு கதவுடன் கூடிய வீடு அல்லது கொட்டகையுடன் தொடர்புடைய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.[1]

ஒட்டோமான் டர்கிஷ் மூலம், [2] இச்சொல் அல்பானிய மொழியில் நுழைந்த. அல்பானிய இலக்கியத்தில் உள்ள முஸ்லீம் பாரம்பரியத்தின் கருவிமாக்கள் இந்த மீட்டர் அளவுசார் அலகினடிப்படையில் தங்கள் பெயரைப் பெற்றனர், கவிஞர்கள் பெஜ்டெக்ஷி என்று அழைக்கப்பட்டனர், அதாவது "ஈரடிக் கவிஞர்கள்" என்று பொருள்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Arabian Poetry for English Readers," by William Alexander Clouston (1881), p. 379 in Google Books
  2. Dizdari, Tahir (2005). "Bejte-ja" në Fjalorin e Orientalizmave në Gjuhën Shqipe. Tiranë: Instituti Shqiptar i Mendimit dhe i Qytetërimit Islam. p. 89.
  3. Elsie, Robert. Historical Dictionary of Albania. Rowman & Littlefield.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயித்&oldid=3663452" இலிருந்து மீள்விக்கப்பட்டது