பெராக்சி நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

பெராக்சி நைட்ரேட்டு (Peroxynitrate) என்பது நிலைப்புத்தன்மையற்ற பெராக்சி நைட்ரிக் அமிலத்திலிருந்து (HNO4) உருவாகும் உப்புகளைக் குறிக்கும். பெராக்சோ நைட்ரேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. பெராக்சி நைட்ரேட்டும் நிலைப்புத்தன்மையற்றதாகும். இது நைட்ரேட்டு மற்றும் ஈராக்சிசனாக சிதைகிறது..[1]

பெராக்சி நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:29270
ChemSpider 4574117
InChI
  • InChI=1S/HNO4/c2-1(3)5-4/h4H/p-1
    Key: UUZZMWZGAZGXSF-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460620
  • [N+](=O)([O-])O[O-]
பண்புகள்
NO4
வாய்ப்பாட்டு எடை 78.00 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

திண்மநிலையில் காணப்படும் பெராக்சி நைட்ரேட்டு உப்புகள் எதுவும் அறியப்படவில்லை.[2] இருப்பினும், வேதியியலாளர் செபாசுட்டியன் மொய்செவிச்சு தனாடர் என்பவர் சோடியம் நைட்ரேட்டு மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியவற்றின் கரைசலை படிகமயமாக்கல் தொடங்கும் வரை ஆவியாக்கி பின்னர் ஆல்ககால் சேர்ப்பதன் மூலம் சோடியம் பெராக்சி நைட்ரேட்டு எண்ணீரேற்றை (NaNO3·H2O2·8H2O) தயாரித்ததாக ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Miyamoto, Sayuri; Ronsein, Graziella E.; Corrêa, Thaís C.; Martinez, Glaucia R.; Medeiros, Marisa H. G.; Di Mascio, Paolo (2009). "Direct evidence of singlet molecular oxygen generation from peroxynitrate, a decomposition product of peroxynitrite". Dalton Transactions (29): 5720. doi:10.1039/b905560f. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. http://dx.doi.org/10.1039/b905560f. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. Mellor, Joseph William (1922). A Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry, Volume 2. New York: Longmans, Green and Co. p. 816.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெராக்சி_நைட்ரேட்டு&oldid=4049358" இலிருந்து மீள்விக்கப்பட்டது