பெரிங் கடல்
பெரிங் கடல் (Bering Sea, உருசியம்: Бе́рингово мо́ре, ஒ.பெ Béringovo móre) அமைதிப் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும் சைபீரியாவிற்கும் இடையே உள்ள ஓர் கரையோரக் கடல் ஆகும்.[1][2] இது ஆழ்ந்த நீர்நிலையாகவும் பின்னர் கண்டத் திட்டுக்களின் மேலாக குறுகலான சாய்வில் எழும் குறைந்த ஆழமுள்ள நீர்நிலையாகவும் உள்ளது. உருசியாவின் முதலாம் பேதுருவின் கீழ் பணிபுரிந்து 1728ஆம் ஆண்டில் அலாஸ்காவைக் கண்டறிந்த டேனிய நாடுகாண் பயணி விட்டஸ் பெரிங் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. [3]
பெரிங் கடல் | |
---|---|
யூடிஎம் வீழலின் அகலாங்கு,நெட்டாங்குடன் பெரிங் கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம் |
பெரிங் கடலை அலாஸ்கா வளைகுடாவிலிருந்து அலாஸ்கா மூவலந்தீவு பிரிக்கின்றது. இதன் பரப்பளவு 2,000,000 சதுர கிலோமீட்டர்கள் (770,000 sq mi) ஆகும். இதன் கிழக்கிலும் வடகிழக்கிலும் அலாஸ்காவும், மேற்கில் கம்சாத்கா மூவலந்தீவும் உருசிய தொலைக்கிழக்கும் தெற்கில் அலாஸ்கா மூவலந்தீவும் அலூசியன் தீவுகளும் அமைந்துள்ளன; தொலைவடக்கில் பெரிங் நீரிணை, பெரிங் கடலை ஆர்க்டிக் பெருங்கடலின் சுக்ச்சி கடலுடன் இணைக்கிறது.[4] பெரிங் கடலின் அங்கமான பிரிஸ்தல் வளைகுடா, அலாஸ்கா மூவலந்தீவை அலாஸ்காவிலிருந்துப் பிரிக்கின்றது.
பெரிங் கடலின் சுற்றுச்சூழல் ஐக்கிய அமெரிக்கா, உருசிய நாட்டெல்லைகளை உள்ளடக்கி உள்ளது; தவிரவும் கடலின் நடுப்பகுதி டோநட் குழி எனப்படும் பன்னாட்டு நீர்நிலையாகவும் உள்ளது. [5]). கடல் பனி,வானிலை, நீரோட்டங்களுக்கிடையேயான இடைவினைகள் இக்கடலின் சூழலை நிலைநிறுத்துகின்றன.
வரலாறு
தொகுபெரும்பாலான அறிவியலாளர்கள் மிகக் கடைசியான பனியூழிக் காலத்தில் கடல் மட்டம் மிகத் தாழ்ந்திருந்ததாகவும் இதனால் கிழக்கத்திய ஆசியாவிலிருந்து மனிதர்கள் வட அமெரிக்காவிற்கு நடையாகவே தற்போதுள்ள பெரிங் நீரிணை வழியாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கருதுகின்றனர். பிற விலங்குகளும் இருபுறமும் இடம்பெயர்ந்துள்ளன. இது பொதுவாக "பெரிங் நிலப்பாலம்" எனக் குறிப்பிடப்படுகின்றது. இதுவே அமெரிக்காக்களுக்குள்ளான முதல் மாந்த நுழைவாக அனைவரும் இல்லாதபோதும் பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்தாகும்.
குலாத் தட்டு அலாஸ்காவின் கீழே கீழமிழ்ந்த தொன்மையான புவிப்பொறைத் தட்டாகும்.[6] இத்தட்டின் சிறிய பகுதி பெரிங் கடலில் உள்ளது.
புவியியல்
தொகுபரப்பு
தொகுபன்னாட்டு நீர்ப்பரப்பிற்குரிய அமைப்பு பெரிங் கடலின் எல்லைகளை இவ்வாறு வரையறுத்துள்ளது:[7]
- வடக்கு: சுக்ச்சி கடலின் தென்பகுதியில் சைபீரியாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையேயுள்ள ஆர்க்டிக் வட்டம்.
- தெற்கு: அலாஸ்கா மூவலந்தீவில் கபூச் புள்ளியிலிருந்து (54°48′N 163°21′W / 54.800°N 163.350°W) அலூசியன் தீவுகள் வழியாக்கமாண்டர் தீவுகளின் தென்முனைக்கும் தொடர்ந்து கம்சாத்காக்கும் வரையப்படும் நேர்கோடாகும்;இதில் அலாஸ்காவிற்கும் கம்சாத்காவிற்கும் இடையேயுள்ள அனைத்து குறுகிய நீர்நிலைகளும் உள்ளடங்கும்.
தீவுகள்
தொகுபெரிங் கடலில் உள்ளத் தீவுகள்:
- பிரைபிலோஃப் தீவுகள் இதில் அலாஸ்காவின் புனித பவுல் தீவும் அடங்கும்
- கமாண்டர் தீவுகளும் பெரிங் தீவும்
- புனித இலாரன்சு தீவு
- டயோமெடு தீவுகள்
- கிங் தீவு, அலாஸ்கா
- புனித மாத்யூ தீவு
- கராகின்சுகி தீவு
- நுனிவாக் தீவு [8]
- இசுலெட்ஜ் தீவு[9]
- அகமெஸ்டர் தீவு[10]
வட்டாரங்கள்
தொகுபெரிங் கடலில் உள்ள வட்டாரங்களில்:
- பெரிங் நீரிணை
- பிரிஸ்டல் விரிகுடா
- அனாடைர் வளைகுடா
- நார்ட்டன் சவுண்டு
பெரிங் கடலில் 16 கடலடிப் பள்ளத்தாக்குகள் உள்ளன; இதில் உலகின் மிகப் பெரிய கடலடிப் பள்ளத்தாக்கான செம்சுகு கேன்யன் அடங்கும்.
சூழ்மண்டலம்
தொகுபெரிங் கடற்பகுதியில் உயிரினங்களின் முதன்மைப் பெருக்கத்திற்கு கண்டத்தட்டுப் பிரிவு முதன்மையான காரணியாகும்.[11] இந்த மண்டலத்தில், ஆழமில்லா கண்டத்திட்டு விரைவாக கீழிறங்குகும் பகுதி பசுமைவளையம் எனப்படுகின்றது. அலோசிய அடியில் குளிர்ந்த நீரிலிருந்து மேலெழும் பயிருணவு தொடர்ந்த அலைதாவரங்கள் உருவாக காரணமாக அமைகின்றது.
இரண்டாவது காரணமாக பருவகால கடற் பனிக்கட்டிகள் இளவேனிற்கால அலைதாவரங்களின் பெருக்கத்தைத் தூண்டுகிறது. பருவகால கடற் பனிக்கட்டி உருகுதல் உப்பு குறைந்த நீரை நடுப்பகுதிக்கும் பிற பகுதிகளுக்கும் பரப்புகின்றது. இதனால் ஏற்படும் படிப்படியான நிலைகளும் நீர்ப்பரப்பியல் விளைவுகளும் இனப்பெருக்கத்தை தூண்டுகின்றன.[12] தவிரவும்பனிக்கட்டி பாசிகள் படர தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன.
பெரிங் கடல் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளதாக சான்றுகள் கிடைக்கின்றன. 1997 வேனிற்காலத்தில் சூடான நீரினால் குறைந்த ஆற்றல் கடற்பாசிகள் பெருகியதாக அறியப்படுகின்றது. நீண்ட கால கரிம ஓரிடதனிமங்களின் பதிகையை கொண்டு வரலாற்றுக் காலங்களிலிருந்தே பெரிங் கடலில் முதன்மை இனப்பெருக்கம் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; அம்புத்தலை திமிலங்களை இதற்கு சான்றாகக் கொள்ளலாம்.[13] கடந்த 50 ஆண்டுகளில் ஆண்டுக்கு முதன்மை இனப்பெருக்கம் 30–40% வரை குறைந்து வருகிறது.[13] இதன்படி பெரிங் கடலின் தாங்கும் இருப்பளவு கடந்த காலத்தை விடக் குறைந்துள்ளதாக அறியப்படுகின்றது.
காட்சியகம்
தொகு-
படிமத்தின் வலது மூலையின் மேற்பகுதியில் அலாஸ்காவின் பனிமூடிய நிலப்பகுதியும் நுனிவாக் தீவும். மையத்தில் செயின்ட் பவுல் மற்றும் செயின்ட் ஜார்ஜ் தீவுகள்.
-
பெரிங் கடலின் செய்மதி ஒளிப்படம் – அலாஸ்கா மேற்புற வலதாக உள்ளது, சைபீரியா மேலே இடது பக்கம் உள்ளது.
-
வடக்கு அமைதிப் பெருங்கடலில் உள்ள பெரிங் கடல்
மேற்கோள்கள்
தொகு- ↑ Fasham, M. J. R. (2003). Ocean biogeochemistry: the role of the ocean carbon cycle in global change. Springer. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-42398-0.
- ↑ McColl, R.W. (2005). Encyclopedia of World Geography. Infobase Publishing. p. 697. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5786-3. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010.
- ↑ "Vitus Bering". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ "Area of Bering sea". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ "North Pacific Overfishing (DONUT)". Trade Environment Database. American University. Archived from the original on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 13 August 2011.
- ↑ Steinberger, Bernhard, and Carmen Gaina Geology 35 (5) 407-410, 2007 Plate-tectonic_reconstructions_predict_part_of_the_Hawaiian_hotspot_tract_to_be_preserved_in_the_Bering_Sea
- ↑ "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
- ↑ "Nunivak island in Bering sea". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ "Alaska Islands of Bering Sea". www.stateofalaskaguide.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
- ↑ "Wilderness.net - Bering Sea Wilderness - General Information". Wilderness.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
- ↑ Springer, A. M.; McRoy, C. P.; Flint, M. V. (1996). "The Bering Sea Green Belt: Shelf-edge processes and ecosystem production". Fisheries Oceanography 5 (3–4): 205. doi:10.1111/j.1365-2419.1996.tb00118.x.
- ↑ Schumacher, J. D.; Kinder, T. H.; Pashinski, D. J.; Charnell, R. L. (1979). "A Structural Front over the Continental Shelf of the Eastern Bering Sea". Journal of Physical Oceanography 9: 79. doi:10.1175/1520-0485(1979)009<0079:ASFOTC>2.0.CO;2. Bibcode: 1979JPO.....9...79S.
- ↑ 13.0 13.1 Schell, D. M. (2000). "Declining carrying capacity in the Bering Sea: Isotopic evidence from whale baleen". Limnology and Oceanography 45 (2): 459. doi:10.4319/lo.2000.45.2.0459. Bibcode: 2000LimOc..45..459S.