பெரியார் அருவி
பெரியார் நீர்விழ்ச்சி, தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள கோமுகி அணைக்கு அருகில் அமையப்பெற்றுள்ளது. கோமுகி அணையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் துரத்தில் வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சி, கள்ளக்குறிச்சியிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் சாலையோரமாக அமைந்துள்ளது.[1][2]
பெரும்பான்மையான நாட்களில் குறைந்த அளவே நீரின் அளவு இருக்கும். மழை பருவ காலங்களில் நீரின் வீழ்ச்சி அளவு மிகவும் அதிகமாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பருவ காலங்களில் இங்கு வந்து இதன் அழகை ரசித்தும், நீர்விழ்ச்சியில் குளித்தும் செல்கின்றனர். செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, இங்கு வந்து செல்ல உகந்த காலமாகும். பல்வேறு மூலிகைச் செடிகள் இப்பகுதிகளில் கிடைக்கின்றன.
பெரியார் நீர்விழ்ச்சியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் துரத்தில் மேகம் நீர்விழ்ச்சி அமையப்பெற்றுள்ளது.