பெரியார் பாலம்
சென்னையில் உள்ள பாலம்
பெரியார் பாலம், முன்பு செயின்ட் ஜார்ஜ் பாலம் மற்றும் திருவல்லிக்கேணி பாலம் என்று அழைக்கப்பட்டது, இது இந்தியாவின் சென்னை நகரில் உள்ள ஒரு கற்காரையாலான ஆற்றுப் பாலமாகும். இது தீவுத்திடலின் தெற்குப்பகுதியை, நகரின் சுற்றுப்புறங்களுடன் இணைப்பதற்காக கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[1][2]
வரலாறு
தொகுபெரியார் பாலம் 1805 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் என்ற பெயரில் பாலமாக கட்டப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து திருவல்லிக்கேணியின் சுற்றுப்புறத்தை அணுகுவதற்கான பாலம் என்பதால், இது திருவல்லிக்கேணி பாலம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பாலம் 1920 ஆம் ஆண்டுகளில் மீண்டும் கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, புனித ஜார்ஜ் பாலம், பெரியார் பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "St. George's Bridge - A heritage bridge of Chennai". St. George's Bridge - A heritage bridge of Chennai. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
- ↑ "Madras Rediscovered". Goodreads (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.